தமிழை ஆட்சி மொழியாக்க கோரி வாஜ்பாயுடன் திமுக, பாமக, மதிமுக எம்.பிக்கள் சந்திப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

தமிழை மத்தியில் ஆட்சி மொழியாகவும், செம்மொழியாகவும் (classical languages) அறிவிக்க வேண்டும் என்றுகோரி பிரதமர் வாஜ்பாயிடம் திமுக, பாமக, மதிமுக எம்.பிக்கள் மனு ஒன்றை சமர்ப்பித்துள்ளனர்.

திமுகவைச் சேர்ந்த சுற்றுச் சூழல் துறை அமைச்சர் டி.ஆர். பாலு தலைமைல் இந்த எம்.பிக்கள் இன்று காலைவாஜ்பாயை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்தனர். அப்போது அவர்கள் வாஜ்பாயிடம் கொடுத்த மனுவில்,

தொன்மை வாய்ந்த தமிழ் மொழியை இந்தியாவின் ஆட்சி மொழியாகவும், செம்மொழியாகவும் அறிவிக்கவேண்டும் என்று நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறோம்.

ஆனால், இதுவரை மத்தியில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள எந்த அரசும் இந்தக் கோரிக்கையைக் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை.

சிங்கப்பூர், மலேசியா, இலங்கை ஆகிய நாடுகளில் கூட தமிழ் ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால்தமிழ் பிறந்த இந்திய நாட்டில் இம்மொழி இன்னும் ஆட்சி மொழியாக அறிவிக்கப்படவில்லை.

ஒரு மொழியை வளர்ப்பதால் அரசுக்கும் மக்களுக்கும் இடையே நெருக்கம் அதிகரிக்குமே தவிர வேறுபாடுஏற்பட்டுவிடாது. மொழி மூலமாக நாம் ஐரோப்பாவைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் லத்தீன், கிரேக்கம்,ஹீப்ரு போன்ற மொழிகளை நாம் தெரிந்து வைத்திருப்பது அவசியம்.

அதுபோல் இந்தியாவின் பாரம்பரியத்தைப் பற்றி உலக மக்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் தமிழையும்சமஸ்கிருத்தையும் அறிந்திருக்க வேண்டும். அந்த அளவுக்கு தமிழ் மிக மிகத் தொன்மையானது.

மேலும், 2003ம் ஆண்டை தமிழ் மொழி ஆண்டாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில்கூறப்பட்டுள்ளது.

பின்னர் நிருபர்களிடம் பேசிய எம்.பிக்கள்,

ஒரு மொழியை செம்மொழியாக அறிவிக்க வேண்டும் என்றால் 11 அடிப்படைத் தகுதிகள் இருக்க வேண்டும்என்று கூறப்பட்டுள்ளது. இந்த 11க்கும் மேற்பட்ட தகுதிகள் தமிழுக்கு உண்டு. தமிழின் தொன்மைக்கு இணையானஒரு மொழி நாட்டிலேயே கிடையாது என்றனர்.

ராஜ்யசபாவில்...

முன்னதாக, தமிழை ஆட்சி மொழியாக அறிவிக்கக் கோரி நேற்று ராஜ்யசபாவில் திமுக, அதிமுக உறுப்பினர்கள்ஒன்று கூடி குரல் எழுப்பினர்.

அதிமுக எம்.பியான பி.ஜி. நாராயணன் இது தொடர்பாக கோரிக்கையை எழுப்பினார். பழம்பெருமை வாய்ந்ததமிழ் மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்கக் கோரி தமிழக முதல்வர் ஜெயலலிதா பலமுறை மத்திய அரசுக்குக்கடிதங்களை எழுதியுள்ளார்.

இதை திமுக எம்.பிக்களும் வரவேற்றனர். "இது அரசியல் விவகாரம் அல்ல. தமிழுக்காக நாங்கள் ஒன்று கூடுவதில்பெருமைப்படுகிறோம்" என்று கூறிய திமுக எம்.பியான விடுதலை விரும்பி, இது தொடர்பாக திமுக தலைவர்கருணாநிதி கூட பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளதாகத் தெரிவித்தார்.

ஜெ. மீது புகார் மனு:

பிரதமரிடம் தமிழுக்காக மனு தந்த திமுக, மதிமுக, பா.ம.க. எம்பிக்கள் இன்னொரு மனுவையும் அளித்தனர். அதில், சமீபத்தில்உங்கள் (பிரதமர்) தலைமையில் சென்னையில் விமான நிகழ்ச்சி நடந்தபோது எம்.பிக்களான எங்களுக்கு தமிழக அரசுஅழைப்பிதழே அனுப்பவில்லை.

இந்த நிகழ்ச்சிக்கு வர எங்களில் சிலர் படாதபாடுபட்டுத் தான் அழைப்பிதழ்களைப் பெற முடிந்தது.

இதனால், இனிமேல் பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்கு அனைத்து எம்.பிக்களுக்கும் அழைப்பு விடுக்க வேண்டும் என தமிழகஅரசுக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+