இரட்டை வேடம் போடும் கட்சிகள்
சென்னை:
மக்களவை, சட்டசபையில் மகளிருக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்ற நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தைமத்திய அரசு கூட்ட வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.
பொடா சட்டத்தை நிறைவேற்ற மக்களவையில் மத்திய அரசுக்கு போதிய பலம் இருந்தது. ஆனால், மாநிலங்களவையில் இல்லை.இதனால், இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தைக் கூட்டி அந்தச் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியது.
ஆனால், இப்போது மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற சில கட்சிகள் எதிர்ப்புத் தெரிவிப்பதாகக் கூறி அந்தமசோதவை அறிமுகப்படுத்தாமலேயே பா.ஜ.க. காலம் தாழ்த்தி வருகிறது.
குறிப்பாக சிவசேனைத் தலைவர் பால் தாக்கரேயும், பல பா.ஜ.க. தலைவர்களும் மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்கவிரும்பவில்லை. காங்கிரஸ் கட்சியில் உள்ள ஆண் எம்.பிக்களும் கூட இந்த இட ஒதுக்கீட்டை விரும்பவில்லை. ஆனால்,சோனியா காந்தியின் உத்தரவு இருப்பதால் இந்தச் சட்டத்தை ஆதரித்தே ஆக வேண்டிய நிலையில் உள்ளனர்.
இந்த மகளிர் இட ஒதுக்கீட்டு சட்டத்தைட லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடிக் கட்சிஆகியவை ஆதரிக்கின்றன. ஆனால், இந்தச் சட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தலித் பெண்களுக்கும் தனி இட ஒதுக்கீடு தரவேண்டும் என்று கோரி வருகின்றனர்.
ஆனால், இதை ஏற்கவும் பா.ஜ.க. தயாராக இல்லை. இதனால், இந்த சட்ட மசோதவை மக்களவையில் கொண்டுவரும்போதெல்லாம் லாலு மற்றும் முலாயம் சிங்கின் கட்சி எம்.பிக்கள் பெரும் ரகளையில் ஈடுபடுகின்றனர். இதையே காரணம்காட்டி சட்டத்தை நிறைவேற்றாமல் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது.
குறிப்பாக சிவசேனையைச் சேர்ந்த சபாநாயகர் முரளிமனோகர் ஜோஷிக்கும் இந்த விஷயத்தில் அவரது கட்சியின் தலைவர் பால்தாக்ரேயிடம் இருந்து உத்தரவு வந்துள்ளது. இதனால் மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதா தொடர்பாக லாலு, முலாயம் கட்சிஎம்.பிக்கள் சபையில் கொஞ்சம் சலசலப்பை ஏற்படுத்தினாலும் உடனே அவையை ஒத்தி வைத்துவிடுகிறார்.
ஆனால், பொடா சட்டத்துக்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட், லாலு, முலாயம் சிங் என ஒட்டு மொத்த எதிர்க் கட்சிகளும் எதிர்ப்புதெரிவித்த போதும் கூட மக்களவை, மாநிலங்களவையின் கூட்டுக் கூட்டத்தை நடத்தி சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியது.
ஆனால், இந்த சட்ட விவகாரத்தில் மட்டும் லாலுவையும் முலாயமையும் காரணம் காட்டி சட்டத்தையே அறிமுகப்படுத்தாமல்மத்திய அரசு ஏமாற்றி வருகிறது.
இதை முதல்வர் ஜெயலலிதா கண்டித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை லோக்சபாவில் நிறைவேற்ற முடியாவிட்டால், இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தை நடத்திசட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சட்டசபை மற்றும் நாடாளுமன்றத்தில் மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதாவை நிறைவேற்றுவதற்கு சிலவிஷம எண்ணம் படைத்த கட்சிகள் முயற்சி மேற்கொள்வது துரதிர்ஷ்டவசமானதாகும்.
இந்த மசோதாவை நிறைவேற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு சரியான நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்றுகூறியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications