அரசு டாக்டர்கள் போராட்டம் தொடங்கியது: அறுவை சிகிச்சைகள் நடக்கவில்லை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு ஆதரவாக, அரசு டாக்டர்களும் இன்று போராட்டத்தில் குதித்தனர். இதனால் தமிழகம் முழுவதும்உள்ள அரசு மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைகள் நடக்கவில்லை. மேலும் நோயாளிகளை அதிக அளவில் சேர்க்க வேண்டாம்எனவும் மருத்துவமனை டீன்களுக்கு அரசு ரகசிய உத்தரவு பிறப்பித்துள்ளது.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கடந்த 3 வாரங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.மாணவர்களின் கோரிக்கைகளை அரசு ஏற்க மறுத்துவிட்டதால், அவர்களுக்கு ஆதரவாக அரசு டாக்டர்களும் போராட்டத்தில்ஈடுபட்டுள்ளனர்.

3 கட்டமாக அவர்கள் போராட்டம் நடத்த உள்ளனர். முதல் கட்டமாக இன்று முதல் வரும் 13ம் தேதி வரை சிறிய அறுவை சிகிச்சைகளைடாக்டர்கள் புறக்கணித்தனர். உயிர் காக்கும் அவசர அறுவைச் சிகிச்சைகளை மட்டுமே செய்வோம் என்று டாக்டர்கள் கூறியுள்ளனர்.

இதனால் ஹெர்னியா, கண் அறுவை சிகிச்சை, கை- கால் மூட்டு அறுவை சிகிச்சை, குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை போன்றவைநிறுத்தப்பட்டுவிட்டன. இதனால் அரசு மருத்துவமனைகள நம்பி இத்தனை காலமாய் சிகிச்சை எடுத்து, அறுவை சிகிசசைக்கு நாளும் குறித்துகாத்திருந்த நோயாளிகள் கலங்கிப் போய் உள்ளனர்.

இதன் பிறகும் அரசு தங்கள் கோரிக்கையை ஏற்காவிட்டால், இரண்டாவது கட்டமாக வரும் 14ம் தேதி பெரிய அறுவை சிகிச்சைகளையும்புறக்கணிக்கத் திட்டமிட்டுள்ளனர்.

அதற்குப் பிறகும் அரசு இறங்கி வராவிட்டால், மூன்றாவது கட்டமாக வரும் 15ம் தேதி முதல் 20ம் தேதி வரை அவசர சிகிச்சைகளைமட்டுமே வழங்கவும் சாதாரண நோய்களுடன் வரும் நோயாளிகளை கவனிக்க மாட்டோம், ஊசி கூட போட மாட்டோம் ((ஞுஞுஞீடூஞு ஞீணிதீணண்ணாணூடிடுஞு) என்றும் அறிவித்துள்ளனர்.

இந்தப் போராட்டங்களையும் அரசு மதிக்காமல் நடந்து கொண்டால், வரும் 21ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில்ஈடுபடுவோம் என்று கூறியுள்ளனர்.

புதிய டாக்டர்கள் நியமனம்:

இதற்கிடையே, அரசு டாக்டர்கள் வேலைக்கு வராவிட்டால், அவர்கள்பணி நீக்கம் செய்யப்பட்டு, புதிய டாக்டர்கள் நியமிக்கப்படுவார்கள்என்று மருத்துவக் கல்வி இயக்குனர் ரவீந்திரநாத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருச்சியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், அரசு மற்றும் தனியார் வேலை வாய்ப்பகங்களில் டாக்டர் வேலை கோரி பதிவுசெய்துள்ள டாக்டர்கள் பட்டியல் பெறப்பட்டுள்ளது.

அரசு டாக்டர்கள் வேலைக்கு வராவிட்டால் உடனடியாக புதிய டாக்டர்களை நியமிக்க மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு அதிகாரம்வழங்கப்பட்டுள்ளது என்றார்.

தனியார் மருத்துவர்கள்:

இது தவிர தனியார் மருத்துவர்களைக் கொண்டு அரசு மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைகள் அளிக்கவும் மாவட்ட நலத்துறைஅதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் அவசர சிகிச்சைகளுக்காக அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்படும் நோயாளிகளை தனியார் மருத்துவனைகளில் சேர்த்துசிகிச்சை தரவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கான கட்டணத்தை அரசே செலுத்தும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் கைது:

இந் நிலையில் ஸ்டான்லி மருத்துவமனையில் முதல்வர் அறையை இன்று மருத்துவக் கல்லூரி மாணவர்கள் முற்றுகையிட்டனர்.இதையடுத்து அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். அதே போல மதுரையில் சாலை மறியலில் ஈடுபட்ட மருத்துவமாணவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நோயாளிகள் வருகை குறைந்தது:

மருத்துவவர்களின் போராட்டத்தையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனைகளுக்கு வருவோரின் எண்ணிக்கைபெருமளவு குறைந்துவிட்டது. கூட்டத்தின் எண்ணிக்கை பாதிக்கும் குறைவாகிவிட்டதாக நலத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மாணவர்களுக்கு நீதிமன்றம் அனுமதி:

இதற்கிடையே, கல்லூரி விடுதியில் தங்கிக்கொள்ள மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 4 பேருக்கு திருநெல்வேலி கோடை கால நீதிமன்றம்அனுமதி அளித்துள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களை அடக்க மாநிலம் முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரி விடுதிகளை அரசு மூடி விட்டது. இதைஎதிர்த்து நெல்லை மருத்துவக் கல்லூரியில் படித்து வந்த வட மாநிலங்களைச் சேர்ந்த 4 மாணவர்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

இதையடுத்து 14ம் தேதி வரை 4 பேரும் விடுதியில் தங்கியிருக்க அனுமதிக்கப்பட வேண்டும் என்று நீதிபதி ரகமதுல்லா உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+