குடத்தை எடுக்க ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் கிணற்றில் இறங்கிய பட்டர் சாவு
ஸ்ரீவில்லிபுத்தூர்:
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் உள்ள கிணற்றில் தவறி விழுந்து கோவில் பூசாரி(பட்டர்) மரணமடைந்தார்.
அருள்மிகு ஆண்டாள் கோவிலில் பட்டராக இருந்து வந்தவர் ஸ்ரீதர். இவர் சென்னையைச் சேர்ந்தவர். 2 நாட்களுக்கு முன் கோவில்கிணற்றில் குடம் விழுந்து விட்டது. இதைத் தொடர்ந்து நேற்று பாலாஜி மற்றும் ஜெகன்னாதன் ஆகிய இரு பட்டர்களும் சேர்ந்து கயிற்றைக்கட்டி ஸ்ரீதரை கிணற்றிற்குள் இறக்கினர்.
அவர் குடத்தை எடுத்துமேலே அனுப்பி விட்டு கயிற்றைப் பிடித்தவாறு மேலே வந்தார். பாதி தூரம் வந்தபோது, தவறி கீழே விழுந்தார்.இதில் அவருக்கு தலையில் பலத்த அடிபட்டது. இதனால் மயங்கிய அவர் தண்ணீரில் மூழ்கி, மூச்சுத் திணறி உயிரிழந்தார்.
தீயணைக்கும் படையினர் விரைந்து வந்து அவரது உடலை மீட்டனர்.
பட்டரின் மரணத்தையடுத்து கோவிலில் ஹோமம் நடத்தப்பட்டது. இதன் பின்னர் மீண்டும் வழக்கமான பூஜைகள் செய்யப்பட்டன.கிணற்றில் இருந்த தண்ணீரும் மோட்டர்கள் மூலம் வெளியேற்றப்பட்டு விட்டது.












Click it and Unblock the Notifications