பிரிஜேஷ் மிஸ்ராவை அழைத்து பேசிய ஜார்ஜ் புஷ்

Subscribe to Oneindia Tamil

Brajesh Mishraவாஷிங்டன்:

பிரதமர் வாஜ்பாயின் பாதுகாப்பு ஆலோசகர் பிரிஜேஷ் மிஸ்ரா வாஷிங்டனில் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷை சந்தித்துப் பேசினார்.

இந்தியா- பாகிஸ்தான் இடையே பேச்சுவார்த்தை துவங்க திரைமறைவில் அமெரிக்கா தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில் இச் சந்திப்புநடந்துள்ளது.

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் காலின் பாவல், ஜார்ஜ் புஷ்சின் பாதுகாப்பு ஆலோசகர் காண்டலிஸ்ஸா ரைஸ் ஆகியோருடனும்லண்டனில் அமெரிக்க வெளியுறவுத்துறை துணை அமைச்சர் ரிச்சர்ட் ஆர்மிடேஜ் உடனும் பேச்சுவார்த்தை நடத்திய மிஸ்ராவை புஷ்திடீரென அழைத்து பேச்சு நடத்தினார்.

இந்தச் சந்திப்பு பிரிஜேஷ் மிஸ்ராவின் பயணத் திட்டத்திலேயே இல்லை. காண்டலிஸ்ஸா ரைசுடன் மிஸ்ரா பேசிக் கொண்டிருந்தபோதுஅவரை புஷ் திடீரென தனது அலுவலகத்தில் அழைத்துப் பேசினார்.

இந்திய அதிகாரி ஒருவரை அகிபர் ஜார்ஜ் புஷ் தனியே சந்தித்துப் பேசியது இந்தியாவின் மீதான அமெரிக்காவின் நிலைப்பாடுமுழுமையாக மாறி வருவதையும் இரு நாட்டு உறவுகள் நாளுக்கு நாள் வலுப்பட்டு வருவதையுமே காட்டுகிறது.

இந்திய-அமெரிக்க உறவில் பில் கிளின்டன் புதிய அத்தியாயத்தை உருவாக்கினார். இந்திய அமைச்சர்கள், வாஷிங்டனில் அந் நாட்டுஅமைச்சர்களைச் சந்தித்துப் பேசும்போது கிளின்டன் பலமுறை திடீரென அங்கு வந்து பலமுறை இந்தியர்களுடன் பேச்சு நடத்தியுள்ளார்.

இந் நிலையில் வாஜ்பாயின் பாதுகாப்பு ஆலோசகர் பிரிஜேஷ புஷ் தனது ஓவல் அலுவலகத்துக்கு அழைத்து சுமார் 15 நிமிடங்கள் பேச்சுநடத்தியுள்ளார். இந்தச் சந்திப்பின்போது பாகிஸ்தானுடனான பதற்றத்தைத் தணிக்க பிரதமர் வாஜ்பாய் எடுத்த முயற்சிகளை புஷ்வெகுவாகப் பாராட்டியதாகத் தெரிகிறது.ஞிஇதற்கிடையே டெல்லி வந்துள்ள ரிச்சர்ட் ஆர்மிடேஜ் வெளியுறவுத்துறை அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா, காங்கிரஸ் தவைவர் சோனியாகாந்தி ஆகியேரைச் சந்தித்துப் பேசினார். பிரதமர் வாஜ்பாயையும் அவர் சந்திக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+