பா.ஜ.க. இல்லாத கூட்டணி தோற்கும்
சென்னை:
தமிழகத்தில் இனி வரும் தேர்தல்களில், பா.ஜ.க. இல்லாத கூட்டணி தோல்வியையே சந்திக்கும் என்று தமிழக பா.ஜ.கவின் புதியதலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணன் கூறினார்.
வரும் தேர்தலில் பா.ஜ.க. யாருடன் கூட்டணி அமைக்கிறது என்பது முக்கியமல்ல. நம்மோடு யார் கூட்டணி வைக்கவிரும்புகிறார்கள் என்பது தான் முக்கியம். அபிமன்யூ போல ஒரு வழி வியூகத்தை நாங்கள் அமைக்க மாட்டோம். இரு வழிவியூகம் அமைப்போம்.
இனி பா.ஜ.க.இல்லாமல் எந்தக் கட்சியும் ஆட்சியைப் பிடிக்க முடியாது. கடந்த இரண்டு எம்.பி. தேர்தல்களிலும் இதை நாங்கள்நிரூபித்துள்ளோம். பாரதீய ஜனதாக் கட்சி சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி என்று பிரசாரம் செய்யப்படுகிறது. இது முற்றிலும்தவறானது. உண்மையிலேயே நாங்கள்தான் மதச்சார்பற்ற கட்சி.
திராவிடக் கட்சிகளின் ஆட்சியைப் பார்த்து மக்கள் ஓய்ந்துவிட்டார்கள். இந்த உணர்வை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இது முற்றிலும் தவறானது. உண்மையிலேயே நாங்கள்தான் மதச்சார்பற்ற கட்சி என்றார் அவர்.
இரு வழி வியூகம் எடுக்கப் போவதாக ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இப்போது பா.ஜ.கவுடன் கூட்டணிவைத்துக் கொண்டுள்ள திமுக அதே நேரத்தில் காங்கிரசுடனும் நெருக்கத்தை அதிகரித்து வருகிறது. இதே பாணியை பா.ஜ.கவும்கடை பிடிக்கும் என்று தெரிகிறது. திமுகவுடன் கூட்டணி இருக்கும். அதே நேரத்தில் அதிமுகவை பகைத்துக் கொள்ளாது.
மேலும் பா.ஜ.கவுடன் யார் சேர விரும்புகிறார்களோ அது தான் முக்கியம் என்று கூறியுள்ளதன் மூலம் அதிமுகவுக்கு வாசலைத்திறந்துவிட்டுள்ளார் ராதாகிருஷ்ணன்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications