நாளை மறுதினம் தமிழக பா.ஜ.க. தலைவர் தேர்தல்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக பா.ஜ.கவுக்கு புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க நாளை மறுநாள் தேர்தல் நடக்கிறது. வேட்பு மனுத் தாக்கல் நாளை நடக்கிறது.

பெரும்பாலும் ஒருமனதாகவே தலைவர் தேர்வு இருக்கும் என்று தெரிகிறது.

இதுவரை தலைவராக இருந்து வந்த கிருபாநிதியின் பதவிக் காலம் முடிவடைவதையொட்டி இந்தத் தேர்தல் நடக்கிறது.

கட்சியின் தலைமையகமான கமலாலயத்தில் நடக்கும் வாக்குப் பதிவில் கட்சியில் மாவட்ட, வட்ட, ஒன்றிய அளவிலான நிர்வாகிகள்வாக்களிக்கவுள்ளனர். இதற்காக இப்போதே பா.ஜ.க. நிர்வாகிகள் சென்னையில் குவிய ஆரம்பித்துவிட்டனர்.

இப்போது தலைவராக உள்ள கிருபாநிதிக்கும் மாநிலச் செயலாளராக இருந்து இல.கணேசனுக்கும் இடையே பெரும் மோதல் நடந்துவந்தது. தலித் சமூகத்தைச் சேர்ந்த கிருபாநிதியை சாதிப் பெயரைச் சொல்லி கணேசன் திட்டியதாகவும், தேசியக் குழுக் கூட்டத்தில் வைத்துதாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இதனால் மனம் வெறுத்துப் போயுள்ள கிருபாநிதி இனி கட்சிப் பணிகளில் இருந்து முழுமையாக ஒதுங்கிக் கொள்வார் என்று தெரிகிறது.

மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை மாநிலத் தலைவர் பதவிக்குக் கொண்டு வர இல.கணேசன் விரும்புகிறார். ஆனால், கோவைபா.ஜ.க. எம்.பியான ராதாகிருஷ்ணனுக்கு கட்சித் தலைமையிடம் ஆதரவிருப்பதாகக் கூறப்படுகிறது.

இன்னொரு அமைச்சரான திருநாவுக்கரசரை தலைவராக்கவும் டெல்லி விரும்பியது.

ஆனால், இந்தப் பதவிக்கு வர இந்த மூவருமே விரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நாளை வேட்பு மனுத் தாக்கல்நடக்கும்போதுதான் யார் தலைவராகப் போகிறார் என்பது தெரியவரும்.

பெரும்பாலும் டெல்லித் தலைமையால் அறிவிக்கப்படும் நபர் மட்டுமே நாளை வேட்பு மனுத் தாக்கல் செய்வார். அவரே தலைவராகவும்தேர்வு செய்யப்படுவார் என்றி தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+