தமிழக பா.ஜ.க. தலைவரானார் கோவை எம்.பி. ராதாகிருஷ்ணன்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக பாரதீய ஜனதாக் கட்சியின் மாநிலத் தலைவராக கோவை எம்.பி. சி.பி.ராதாகிருஷ்ணன் இன்றுபோட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டார்.

இதுவரை அவர் கட்சியின் மாநிலத் துணைத் தலைவராக இருந்தார்.

தமிழக பா.ஜ.க.தலைவர் டாக்டர் கிருபாநிதியின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகிறது. அதேபோல, 39பொதுக்குழு உறுப்பினர்களின் பதவிக் காலமும் இன்றுடன் முடிகிறது. இதைத் தொடர்ந்து புதிய நிர்வாகிகளைத்தேர்வு செய்ய இன்று தேர்தல் நடந்தது.

இதற்கான வேட்பு மனுத் தாக்கல் நேற்று நடந்தது. துணைப் பிரதமர் அத்வானியின் தீவிர ஆதரவாளரான கோவைஎம்.பி. சி.பி.ராதாகிருஷ்ணன் மட்டும் வேட்பு மனுத் தாக்கல் செய்தார். இதையடுத்து இன்று தேர்தல் ஏதும்நடத்தப்படாமல் ராதாகிருஷ்ணன் ஒருமனதாக தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள, கோவை சி.பி.ராதாகிருஷ்ணன், தமிழகத்திலிருந்து எம்.பியாக வெற்றிபெற்ற முதல் பா.ஜ.க.வேட்பாளர் ஆவார். கோவையில் பா.ஜ.கவை வளர்த்தவர்களில் முக்கியமானவர். தீவிரமானஆர்.எஸ்.எஸ். உறுப்பினர். இவரை அத்வானி தான் மாநிலத் தலைவர் பதவிக்குத் தேர்வு செய்துள்ளார்.

டெல்லியில் நல்ல அதிகாரம் கொண்ட ராதாகிருஷ்ணன் தலைவராவதை இல.கணேசன் கோஷ்டியினர்விரும்பவில்லை. தனது பேச்சைக் கேட்டு நடக்கும் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனையே தலைவராக்கஅவர் விரும்பினார்.

ஆனால், அதை அத்வானி ஏற்கவில்லை.இதுவரை தலைவராக இருந்த கிருபாநிதி, இல.கணேசனால் மோசமாகநடத்தப்பட்டார். தலித் என்பதால் கேவலப்படுத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் கணேசன் மீதுடெல்லி பா.ஜ.க. அதிருப்தியில் இருந்து வருகிறது.

இப்போது அவருக்குக் கடிவாளம் போடும் வகையில் ராதாகிருஷ்ணன் தலைவராக்கப்பட்டுள்ளார்.

எம்.எல்.ஏவான எச்.ராஜாவைத் தலைவராக்குமாறு அதிமுக தரப்பிலிருந்து காஞ்சி மடம் மூலமாக டெல்லிக்குபிரஸ்ஸர் கொடுக்கப்பட்டது. ஆனால், திமுகவுடன் மோதல் போக்கைக் கடைபிடிக்கும் ராஜாவின் பெயரை பிரதமர்வாஜ்பாய் ஒதுக்கிவிட்டார்.

விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில், இளம் தலைவர் ஒருவரை தேர்வு செய்ய கட்சி மேலிடம்நினைத்ததால், சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆனால், தமிழகத்தைப் பொறுத்தவரை முற்பட்ட இனத்தைச் சேர்ந்தவர்களைத் தவிர்த்துவிட்டு பிற்பட்ட அல்லதுதாழ்த்தப்பட்ட ஒருவரையே தலைவராகப் போட ஆர்.எஸ்.எஸ். மற்றும் வி.எச்.பி. ஆகியவை விரும்பின. இந்தஅமைப்புகளின் பரிந்துரையால் தான் கிருபாநிதி தலைவராக்கப்பட்டார்.

இப்போதும் அதே நிலையில் தான் இந்த அமைப்புகள் உள்ளன. ஆனால், ராதாகிருஷ்ணன் என்பதால் முற்பட்டஇனத்தவராக இருந்தாலும் கூட அவரை ஆர்.எஸ்.எஸ்சும் வி.எச்.பியும் ஒப்புக் கொண்டுவிட்டன.

இன்று மாலை தலைவராகப் பதவியேற்கும் ராதாகிருஷ்ணன் அடுத்த 3 ஆண்டுகள் இந்தப் பதவியில் இருப்பார்.

பொதுக் குழு:

தமிழக பா.ஜ.க. பொதுக்குழு உறுப்பினர் பதவிக்கு முன்னாள் அமைச்சர் டாக்டர் ஹண்டே, நடிகை லதா உள்ளிட்ட39 பேர் மனு செய்தனர். அவர்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+