நாளை கரையைக் கடக்கிறது புயல்: இன்று இரவு முதல் பலத்த மழை பெய்யும்
சென்னை:
வங்கக் கடலில் தோன்றியுள்ள புயல் சின்னம் தமிழகத்தை நோக்கி நெருங்கி வருகிறது.
நாளை மாலைக்குள் வட தமிழகத்துக்கும் ஆந்திராவுக்கும் இடையே இது கரையைக் கடக்கும். இதனால் இன்றுஇரவு முதல் அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம் முழுவதும் கடும் சூறாவளிக் காற்றுடன் மிக கனத்த மழை பெய்யும்என வானிலை ஆய்வு நிலையம் எச்சரித்துள்ளது.
இந்த புயல் சின்னத்தால் தமிழகம், கர்நாடகத்தின் தென் பகுதிகள் முழுவதும் மேக மூட்டம் சூழ்ந்துள்ளது. ஒரேநாளில் வெப்பம் தணிந்தது. வெயிலையே பார்க்க முடியவில்லை. வானம் மப்பும் மந்தாரமாக உள்ளது. இதனால்அக்னி வெயிலில் தகித்துக் கொண்டிருந்த தமிழக மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளனர்.
இந்த மழையால் குடிநீர் பற்றாக்குறை குறைவதோடு, குறுவை விவசாயப் பணிக்குத் தேவையான நீரும் கிடைக்கும்என்று நம்பப்படுகிறது.
நேற்று மாலை சென்னையிலிருந்து 800 கி.மீ. தென்கிழக்குத் திசையில் வங்காள விரிகுடாவில் மையம்கொண்டிருந்த இந்த புயல் சின்னம் இன்று காலை 700 கி.மீ. தூரத்துக்கு நெருங்குயது. இன்று காலை முதல் சிறிதுநேரம் ஒரே இடத்தில் இருந்த புயல் சின்னம், பகலில் மெதுவாக சென்னையை நோக்கி நகர்ந்து தற்போது சுமார்600 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது.
இது மேலும் நகர்ந்து நாளை மாலைக்குள் தமிழகத்தின் வட பகுதிகளைத் தாக்கும் என்று தெரிகிறது. அப்போது 120கி.மீ. வேகத்தில் புயல் காற்று வீசும். இதனால் இன்று இரவு முதல் சென்னை, அதன் சுற்று வட்டாரங்கள் மற்றும்ஆந்திராவின் கடலோர மாவட்டங்கள், தென் கர்நாடகப் பகுதிகளில் பலத்த மழை பெய்யும் எனஎதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களிலும் பாண்டிச்சேரியிலும் கன மழைபெய்யும் என்று தெரிகிறது. பலத்த சூறாவளி, இடி, மின்னலுடன் மழை பெய்யும் என வானிலை ஆய்வு நிலையம்தெரிவித்துள்ளது.
இதனால் கடலோர மாவட்டங்களில் வாழும் மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன் பிடிக்க வேண்டாம் என்றுவானிலை ஆய்வு நிலையம் எச்சரித்துள்ளது. கோடை காலத்தில் இதுபோன்ற புயல் சின்னம் உருவாவது மிக மிகஅரிதாகும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications