நாட்டின் முதல் பெண் கமாண்டோ படை: நாளை ஜெ. அறிமுகப்படுத்துகிறார்
சென்னை:
இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் உருவாக்கப்பட்டுள்ள பெண் கமாண்டோ படையை புதன்கிழமை முதல்வர் ஜெயலலிதாமுறைப்படி அறிமுகப்படுத்துகிறார்.
இந்தியாவில் ஆண் வீரர்களை மட்டுமே கொண்டதாக கமாண்டோ படைகள் உள்ளன. ஆனால் தமிழகத்தில், நாட்டிலேயே முதல் முறையாகபெண்களைக் கொண்டு அதிரடிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
160 பெண் போலீஸார் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு ஆண்களுக்கு இணையான பயிற்சி கொடுக்கப்பட்டு கமாண்டோக்களாகஉருவாகியுள்ளனர். சாதாரண ஓட்டம் முதல் துப்பாக்கியால் சுடுவது, கராத்தோ உள்பட பல விதமான தாக்குதல் கலைகள், ஆயுதப்பயிற்சிகளில் புடம் போட்ட பிறகு இவர்கள் கமாண்டோக்களாக உருவெடுத்துள்ளனர்.
சமீபத்தில் தொடர் ஓட்டமாக இந்தப் பெண் கமாண்டோக்கள் கன்னியாகுமரியிலிருந்து புறப்பட்டு சென்னை வந்தனர். கிட்டத்தட்ட 700கி.மீ. தூரம் தொடர்ந்து ஓடி வந்து தங்களது உடல் வலுவை எடுத்துக் காட்டி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினர்.
இந்த கமாண்டோ படையின் செயல்பாடுகளை அதிகாரப்பூர்வமாக ஜெயலலிதா துவக்கி வைக்கிறார். நாளை மாலை 5.45 மணிக்கு ராஜாஅண்ணாமலைபுரத்தில் மருதம் இல்ல வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பெண் கமாண்டோக்களின் தலைமை அலுவலகத்தில் தொடக்கவிழா நடக்கிறது.
விழாவில் முதல்வர் ஜெயலலிதா, டிஜிபி கோவிந்த், உள்துறைச் செயலாளர் சையத் முனீர் ஹோதா ஆகியோர் கலந்துகொள்கின்றனர். பெண்கமாண்டோக்களின் சாகச நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications