மண்டபம் அகதிகளை இலங்கை அனுப்ப இந்தியா பேச்சு
ராமேஸ்வரம்:
மண்டபம் முகாமில் தங்கியுள்ள இலங்கைத் தமிழ் அகதிகளை அவர்களுடைய தாய்நாட்டுக்கு அனுப்புவது குறித்துஇந்திய, இலங்கை அதிகாரிகள் பேச்சு நடத்தி வருகின்றனர்.
கடந்த 1983ம் ஆண்டிலிருந்து இதுவரை ஆயிரக்கணக்கான இலங்கைத் தமிழ் மக்கள் கடல் கடந்து தமிழகத்திற்குஅகதிகளாக வந்து சேர்ந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் மண்டபம் அகதிகள் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இலங்கையில் கடந்த 14 மாதங்களாகப் போர்நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ளது. இதைத் தொடர்ந்துதமிழகத்தில் உள்ள பெரும்பாலான இலங்கைத் தமிழ் அகதிகள் தங்கள் தாயகத்திற்குச் செல்ல விருப்பம்தெரிவித்துள்ளனர்.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் சிறப்புச் செயலாளரான ஆர்.கே. சர்மா நேற்று மண்டபத்தில் உள்ள அகதிகள்முகாமுக்கு வந்திருந்தார். தமிழ் அகதிகளை நேரில் சந்தித்த அவர், இலங்கைக்கு மீண்டும் செல்ல அவர்களுக்குஎந்த அளவுக்கு விருப்பம் உள்ளது என்பதைக் கேட்டறிந்தார்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய சர்மா, "பெரும்பாலான தமிழ் அகதிகள் தங்கள் சொந்த நாட்டுக்குச் செல்லவிரும்புகிறார்கள். அவர்களை அங்கு அனுப்பி வைக்க எங்களுக்கும் விருப்பம்தான். இது தொடர்பாக இரு நாட்டுஅதிகாரிகளும் பேசி வருகிறோம்.
இலங்கையில் தற்போது நிலவும் சூழ்நிலைகளை நாங்கள் கவனத்தில் கொண்டுள்ளோம். அதைப் பொறுத்துவிரைவில் தமிழ் அகதிகளை அங்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார் சர்மா.
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஜயகுமார், அகதிகள் மறுவாழ்வுத் துறை அதிகாரி மணிவண்ணன் ஆகியோர்சர்மாவுடன் நேற்று ராமேஸ்வரம் வந்திருந்தனர்.
மீண்டும் புலிகளுக்கு ராணுவப் பயிற்சி:
இதற்கிடையே விடுதலைப்புலிகள் தங்கள் ராணுவத்தை மேலும் வலுப்படுத்த முடிவு செய்துள்ளனர்.
இலங்கை அரசுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகளை கடந்த மாதம் 21ம் தேதி புலிகள் திடீரென முறித்துக்கொண்டனர். இருந்தாலும் பேச்சுக்களை மீண்டும் தொடங்குவதற்கான முயற்சிகள் ஒரு பக்கம் நடைபெற்றுவருகின்றன.
மறுபுறம் தங்கள் படைகளை வலுப்படுத்த புலிகள் முடிவு செய்துள்ளனர். அமைதிப் பேச்சுக்கள் தடைபட்டுள்ளதால்எந்த நேரத்திலும் மீண்டும் புலிகளுக்கும் இலங்கை ராணுவத்தினருக்கும் இடையே போர் ஏற்பட வாய்ப்புள்ளதாகக்கருதப்படுகிறது.
எனவே புதிதாகத் தங்கள் இயக்கத்தில் சேர்ந்துள்ளவர்களுக்கு விரைவில் ராணுவப் பயிற்சி வழங்கப்படும் எனகிழக்கு திரிகோணமலைப் பிரிவு புலிகள் ராணுவத் தளபதி பதுமன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications