டாக்டர்கள் ஸ்டிரைக் முன் கூட்டியே தொடங்கும்?
சென்னை:
டாக்டர்கள் சங்கத் தலைவர் பிரகாசம் உள்ளிட்ட நிர்வாகிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில்,1200 மருத்துவ மாணவர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதால் அரசு மருத்துவர்கள் தங்களது காலவரையற்றபோராட்டத்தை உடனடியாகத் தொடங்க முடிவு செய்துள்ளனர்.
இது தொடர்பாக விவாதிக்க மருத்துவர் சங்கத்தின் நிர்வாகக் குழு இன்று சென்னையில் அவசரமாகக் கூடுகிறது.
கடந்த வாரத்தில் அறுவை சிகிச்சை நடத்தா போராட்டம் மேற்கொண்ட டாக்டர்கள் பின்னர் ஒருநாள் முழு வேலை நிறுத்தத்திலும் ஈடுபட்டனர். இதனால் 4 நோயாளிகள் இறந்தனர்.ஆயிரக்கணக்கான நோயாளிகள் பெரும் சிரமத்தில் ஆழ்ந்தனர்.
இதையடுத்து ஊசி போடா போராட்டத்தை மருத்துவர்கள் கைவிட்டனர். ஆனால், அதே நேரத்தில்அரசு தங்களுடன் பேச்சு நடத்த முன் வராவிட்டால் வரும் 21ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடத்த மருத்துவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
இந் நிலையில் தான் போராட்டத்துக்குத் தலைமை வகித்து வரும் மருத்துவர் சங்கத் தலைவர் டாக்டர்பிரகாசம் உள்ளிட்ட 15 நிர்வாகிகள் அதிரடியாக டிரான்ஸ்பர் செய்யப்பட்டனர். இப்போது 1,200மருத்துவ மாணவர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் தங்களுடன் அரசு பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்ற டாக்டர்களின்கோரிக்கையையும் நலத்துறை அமைச்சர் செம்மலை நிராகரித்துவிட்டார். அவர் கூறுகையில்,
டாக்டர்களுடன் அரசு தனியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்கமுடியாது. காரணம், அவர்களது போராட்டம் யாருக்காக என்பதில் அவர்கள் உறுதியாக இல்லை.
முதலில் மாணவர்களுக்காக போராடுகிறோம் என்றார்கள். இப்போது மாணவர்களின்போராட்டத்திற்கும், தங்களது போராட்டத்திற்கும் சம்பந்தம் இல்லை என்கிறார்கள்.
இப்படி தெளிவே இல்லாமல் இருக்கும் அவர்களுடன் பேச்சு நடத்த முடியாது.
டாக்டர்கள் தங்களது ஸ்டிரைக்கை உடனடியாக கைவிட வேண்டும். இல்லாவிட்டால் கடும்நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கனவே, 4400 டாக்டர்கள் தங்களை அரசிடம் பதிவு செய்துகொண்டு பணி நியமனத்திற்காக காத்துக் கொண்டுள்ளனர்.
ஸ்டிரைக்கை டாக்டர்கள் கைவிடாவிட்டால், அவர்களை பணியிலிருந்து நீக்கி விட்டு புதியடாக்டர்களை நியமிக்க அரசு கொஞ்சம் கூட தயங்காது என்றார்.
இதனால் 21ம் தேதி முதல் நடத்தத் திட்டமிட்டுள்ள தங்களது காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தை முன்னதாகவே தொடங்க அரசு மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர்.
இது குறித்து முடிவெடுக்க அரசு மருத்துவர் சங்கத்தின் அவசர கூட்டம் இன்று சென்னையில்கூடுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications