21 முதல் வேலை நிறுத்தம்: 300 காண்ட்ராக்ட் மருத்துவர்கள் நியமனம்- மேலும் 3,800 மாணவர்கள் சஸ்பெண்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மேலும் 3,800 மருத்துவக் கல்லூரி மாணவர்களை தமிழக அரசுசஸ்பெண்ட் செய்துள்ளது. இதுவரை மொத்தம் 5,000 மாணவர்கள் சஸ்பெண்ட்செய்யப்பட்டுள்ளனர்.

இந் நிலையில் வரும் 21ம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தைத் தொடங்கப் போவதாக அரசுடாக்டர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இந்த ஸ்டிரைக்கை முறியடிக்க ரூ, 8,000 ஊதியத்தில் 2 ஆண்டு காண்ட்ராக்டில் 300 சிறப்புப் பிரிவு டாக்டர்களைஉடனடியாக நியமிக்க அரசு முடிவு செய்துள்ளது. மேலும் மாவட்டத்துக்கு 100 டாக்டர்களும் நியமிக்கப்படஉள்ளனர்,

தமிழகத்தில் மேலும் தனியார் மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க அனுமதிக்கக் கூடாது என்பதுஉள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கடந்த மாதம்23ம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அரசுடன் நடந்த இரு சுற்றுப் பேச்சுவார்த்தைகளும் தோல்வி அடைந்துவிட்டன.

இதைத் தொடர்ந்து 1,200 மருத்துவக் கல்லூரி மாணவர்களை தமிழக அரசு சஸ்பெண்ட் செய்தது.இந்நிலையில் மேலும் 3,800 மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக மருத்துவக் கல்விஇயக்குநர் டாக்டர் ரவீந்திரநாத் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறுகையில்,

இவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் அடுத்த மாதம் தொடங்கும் செமஸ்டர்தேர்வை அவர்களால் எழுத முடியாது.

மருத்துவப் பட்ட மேற்படிப்பு மாணவர்கள் எத்தனை நாட்கள் வகுப்புகளுக்கு வராமல்இருக்கிறார்களோ அந்த நாட்களைப் பணிக்காலத்திலிருந்து நீக்கி விடுவோம் என்றார் டாக்டர்ரவீந்திரநாத்.

எதற்கும் தயார்- மாணவர்கள்:

இதற்கிடையே தாங்கள் எத்தகைய நடவடிக்கையையும் சந்திக்கத் தயார் நிலையில் உள்ளோம் என்றுமருத்துவக் கல்லூரி மாணவர்கள் கூறியுள்ளனர்.

தனியார் மருத்துவக் கல்லூரிகள் துவங்கப்படுவதை வரவேற்றும் 211ம் அரசாணையை அரசுஉடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்றும் அதுவரை தங்கள் போராட்டம் தொடரும் என்றும்,இதற்காக அரசு தங்கள் மீது எத்தகைய நடவடிக்கையை எடுத்தாலும் அதைச் சந்திக்கத் தாயராகஉள்ளோம் என்றும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

டாக்டர்கள் போராட்டம்:

இதற்கிடையே அரசு டாக்டர்கள் சங்க நிர்வாகிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டது, பேச்சு நடத்த அரசுமறுப்பது ஆகியவை குறித்து விவாதிக்க இந்தச் சங்கத்தின் செயற்குழு அவசரமாகக் கூறியது.

அதில், திட்டமிட்டபடி வரும் 21ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொடங்குவதுஎன்று முடிவு செய்யப்பட்டுள்ளது. டாக்டர்களின் ஒரு நாள் போராட்டத்தின் போது சிகிச்சை கிடைக்காமல் 5 பேர்பலியானது நினைவுகூறத்தக்கது.

2 ஆண்டு காண்ட்ராக்ட் டாக்டர்கள்:

இதையடுத்து அரசு டாக்டர்களுக்கு பாடம் புகட்டும் வகையில் உடனடியாக மாநிலம் முழுவதும் 300 டாக்டர்களைமாதம் ரூ. 8,000 ஊதியத்தில் நியமிக்க அரசு முடிவு செய்துள்ளதாக பொது சுகாதாரத்துறை இயக்குனர்கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இவர்கள் 2 ஆண்டுகள் காண்ட்ராக்ட் அடிப்படையில் பணியில் சேர்கப்படுவார்கள். 2 ஆண்டுகள் பணியாற்றினால்இவர்கள் அரசுப் பணியிலேயே நிரந்தரமாக்கப்படுவார்கள் என்ற உறுதிமொழியும் அளிக்கப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக மகப்பேறு, நரம்பியல், குழந்தைகள் நலம் உள்ளிட்ட சிறப்பு மருத்துவப் பிரிவுகளைச் சேர்ந்த 300சிறப்பு மருத்துவர்களை உடனடியாக நியமிக்கப்படவுள்ளனர்.

மாவட்டத்துக்கு 100 என்ற அடிப்படையில் 3,000 டாக்டர்களை தாற்காலிகமாக நியமிப்பதையும்விரைவுப்படுத்துமாறு மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவர்கள் பணிக்கு வந்தால் ஒருநாளைக்கு ரூ. 500 ஊதியம் வழங்கப்படும் என்றார்.

தேர்வுகள் திட்டமிட்டபடி நடக்கும்:

இதற்கிடையே மருத்துவக் கல்லூரிகளின் ஆண்டுத் தேர்வுகள் திட்டமிட்டபடி நடக்கும் என்றும், இதற்கு தமிழகமருத்துவத்துறை பேராசிரியர்கள் ஒத்துழைப்பு அளிக்காவிட்டால் வெளி மாநில பேராசிரியர்களின் உதவியுடன்தேர்வுகள் நடத்தப்படும் என மருத்துவக் கல்வித்துறை இயக்குனர் ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பயிற்சி டாக்டர்கள் பயிற்சியை முடித்தாலும் கூட அதற்கான சான்றிதழ்கள்அளிக்கப்பட மாட்டாது என்றும் அவர் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+