ஸ்டிரைக்: நாளை நாடு முழுவதும் வங்கிகள் இயங்காது
சென்னை:
தமிழகம் உள்பட நாளை நாடு முழுவதும் வங்கிப் பணிகள் ஸ்தம்பிக்க உள்ளன. அதே போல தபால்துறை,தொலைபேசிச் சேவைகளும் பாதிக்கப்பட உள்ளன.
மத்திய அரசின் தனியார்மயக் கொள்கைகளைக் கண்டித்து இந்தப் போராட்டம் நடக்கிறது. இதில் தமிழக அரசுஊழியர்களைப் பொறுத்தவரை இடதுசாரி சங்கங்கள் மட்டுமே பங்கேற்கப் போவதாக அறிவித்துள்ளன.
காங்கிரஸ், திமுக, அதிமுக ஆதரவு ஊழியர் அமைப்புகள் போராட்டத்தைப் புறக்கணிக்கின்றன. இதனால் மாநிலஅரசுப் பணிகள் அவ்வளவாக பாதிக்கப்படாது என்று தெரிகிறது.
ஆனால், மத்திய அரசு அலுவலகங்கள், தொலைத் தொடர்பு, பொதுத்துறை வங்கிகள், தபால்துறை ஆகியவற்றின்செயல்பாடு முழுமையாக ஸ்தம்பிக்கவுள்ளன. தனியார் வங்கிகள், தனியார் தொலைபேசி நிறுவனங்கள் வழக்கம்போல் இயங்கும்.
அதே போல மின்துறை ஊழியர்களின் ஒரு பிரிவினரும் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெறச் செய்ய மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சாகிப் சிங்வர்மா பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், பேச்சுவார்த்தை தோல்வியடைந்துவிட்டது.












Click it and Unblock the Notifications