டி.ஆர். பாலு உத்தரவு விவகாரம்: ஜெயாவுக்கு கேரள முதல்வர் ஆதரவு
சென்னை:
கடலோரப் பகுதிகளில் உள்ள பழங்கால கட்டடங்களை இடிக்கத் தடை வித்து மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சர்டி.ஆர். பாலு விதித்த உத்தரவு தொடர்பாக முதல்வர் ஜெயலலிதாவுக்கு கேரள முதல்வர் ஆண்டனி ஆதரவுதெரிவித்துள்ளார்.
ராணிமேரிக் கல்லூரியை இடித்துவிட்டு அங்கு தலைமைச் செயலகம் கட்டும் ஜெயலலிதாவின் திட்டத்தைமுறியடிப்பதற்காகத் தான் இந்த உத்தரவையே பாலு பிறப்பித்தார். இதையடுத்து பாலுக்கும் ஜெயலலிதாவுக்கும்இடையே மோதல் ஏற்பட்டது.
கடலோர மாநிலங்களின் உரிமைகளில் மத்திய அரசு தலையிடுவதாக ஜெயலலிதா புகார் கூறினார். இந்தஉத்தரவை வாபஸ் பெறக் கோரி ஜனாதிபதி அப்துல் கலாம், பிரதமர் வாஜ்பாய், தனக்கு நெருக்கமான துணைப்பிரதமர் அத்வானி ஆகியோருக்கு கடிதம் எழுதினார்.
மேலும் கடலோர மாநில முதல்வர்களுக்கும் தனித்தனியே கடிதங்கள் அனுப்பியிருந்தார். லட்சத்தீவுகள் மற்றும்அந்தமான் ஆளுநர்களுக்கும் கூட அந்தக் கடிதங்களை அனுப்பினார்.
அதில், மாநில அரசுகளைக் கலந்து ஆலோசிக்காமல் மாநிலங்களின் உரிமையைப் பறிக்கும் வகையில்பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்க்குமாறு ஜெயலலிதா கோரிக்கை விடுத்திருந்தார்.
இதுவரை ஜெயலலிதாவின் கோரிக்க்ைகு யாருடைய ஆதரவும் கிடைக்காத நிலை இருந்தது. பாண்டிச்சேரிமுதல்வர் ரங்கசாமி அதைப் பெயருக்குப் படித்துவிட்டு கடிதத்தை தலைமைச் செயலருக்கு அனுப்பிவைத்துவிட்டார்.
இந் நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் கேரள முதல்வர் ஆண்டனியின் ஆதரவு ஜெயலலிதாவுக்குக்கிடைத்துள்ளது. சோனி காந்தியை ஆண்டோனியோ மேனோ என்று அவரது ஒரிஜினல் பெயரைச் சொல்லிஅழைத்து ஜெயலலிதா விமர்சித்ததில் இருந்தே காங்கிரசார் யாரும் ஜெயலலிதாவுடன் பேச்சே வைத்துக்கொண்டதில்லை.
இதற்கிடையே காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கேரள முதல்வர் ஆண்டனி, ஜெயலலிதாவுக்கு பதில் கடிதம்எழுதியுள்ளார். அதில், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் விதித்த உத்தரவு நிச்சயம் கடலோர மாநிலங்களின் நலனைபாதிக்கும். ரூ. 5 கோடி மதிப்புக்கு மேல் கட்டடம் கட்ட ஒவ்வொரு முறையும் மத்திய அரசிடம் போய் மாநில அரசுஅனுமதி கோர வேண்டியிருக்கும்.
நியாயமான உத்தரவாகவே இது இருந்தாலும் கடலோர வளர்ச்சிப் பணிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில்மத்திய அரசு நடந்து கொள்ளக் கூடாது என்று கூறியுள்ளார் ஆண்டனி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications