மருத்துவ மாணவர்களிடையே பிளவு: வகுப்புக்கு திரும்ப தொடங்கினர்
சென்னை:
ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ள மருத்துவக் கல்லூரி மாணவர்களிடையே பிளவு ஏற்பட்டுள்ளது.இதனால் ஒரு பிரிவு மாணவர்கள் வகுப்புகளுக்குத் திரும்பத் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த ஒரு மாதமாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு தமிழகஅரசு பல்வேறு எச்சரிக்கைகள், கெடு ஆகியவற்றை விதித்தது.
ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ள 5,000 மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். 1,200 பேர் தேர்வுஎழுத தடை விதிக்கப்பட்டனர்.
அரசின் இந்த நடவடிக்கையால் மாணவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. சில மாணவர்கள்போராட்டத்திலிருந்து விலகத் தொடங்கினர். தற்போது சென்னை மருத்துவக் கல்லூரிகளைச் சேர்ந்த14 மாணவர்கள் வகுப்புகளுக்குத் திரும்பினர்.
சென்னை மருத்துவக் கல்லூரியில் 6 பேரும், பல் மருத்துவக் கல்லூரியில் 4 பேரும், கீழ்ப்பாக்கம்மருத்துவக் கல்லூரியில் 2 பேரும், ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் 2 பேரும் வகுப்புகளுக்குத்திரும்பினர்.
மாணவர்களின் வீடுகளுக்கு மருத்துவக் கல்வி இயக்குனரகம் அனுப்பிய நோட்டீஸ்தான், இதற்குக்காரணம் என்று தெரிகிறது.
அந்த நோட்டீஸ், பெற்றோர்களின் மனதை மாற்றும் வகையிலும், மிரட்டும் வகையிலும்இருந்ததால், பெற்றோர்களின் நெருக்குதல் காரணமாக இந்த மாணவர்கள் ஸ்டிரைக்கை வாபஸ்பெற்றுள்ளதாக போராடும் பிற மாணவர்கள் தெரிவிக்கிறார்கள்.
கல்லூரி விடுதிகள் திறக்கப்பட்டால் மேலும் பல மாணவர்கள் ஸ்டிரைக்கை கைவிட்டு விட்டுத்திரும்புவார்கள் என்று வகுப்புகளுக்குத் திரும்பிய மாணவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
கல்லூரிக்குத் திரும்பிய இந்த மாணவர்கள் மீண்டும் ஸ்டிரைக்கில் கலந்து கொள்ள மாட்டோம் என்றுஉறுதிமொழி கொடுத்துள்ளதாக மருத்துவக் கல்வி இயக்குனர் டாக்டர் ரவீந்திர நாத்தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் வகுப்புகளுக்குத் திரும்பத் தொடங்கியிருப்பது, ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளமாணவர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. ஆனாலும் தங்கள் போராட்டம் தொடரும் என மருத்துவ, பல்மருத்துவ மாணவர்கள் கூட்டுப் போராட்டக் குழு அறிவித்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications