திமுக தேர்தலில் ஜாதி சண்டை: களத்தில் குதித்த அதிமுக, பாமக, காங்
சென்னை:
திமுக உட்கட்சித் தேர்தல் மோதலில் மதுரையில் முக்கியத் தலைவர் படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில்,சென்னையில் நடந்த வட்டச் செயலாளர் தேர்தலில் பல்வேறு கட்சியினரும் ஓட்டுப் போட்டு செயலாளரைதேர்ந்தெடுத்த வேடிக்கை நடந்துள்ளது.
தாம்பரம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட, தரமணி 154-வது வட்டச் செயலாளர் தேர்தலில் கோபி என்பவரும்,நாஞ்சில் ஸ்டீபன் என்பவரும் போட்டியிட்டனர். இவர்களில் ஸ்டீபன் பழம்பெரும் திமுக பிரமுகர். அண்ணாகாலத்திலிருந்து திமுகவில் இருந்து வருபவர். கருணாநிதியிடம் நேரடியாகப் பேசும் அளவுக்கு செல்வாக்குஉள்ளவர்.
வாக்குகளை இழுப்பதில் கோபி ஆதரவாளர்களும் ஸ்டீபன் ஆதரவாளர்களும் தீவிரமாக ஈடுபட்டனர். இவர்களில்ஸ்டீபன் நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர், கோபி கோனார் சமூகத்தைச் சேர்ந்தவர். இருவருக்கும் இடையே கடும்போட்டி நிலவிய நிலையில் ஜாதி குறுக்கிட்டது.
கோபிக்கு ஆதரவாக கோனார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் களம் இறங்கினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்த ஸ்டீபனுக்கு ஆதரவாக நாடார்கள் களம் இறங்கினர்.
ஸ்டீபனின் வெற்றியை உறுதி செய்வதற்காகவும், பிரச்சினைகள் ஏற்பட்டால் சமாளிக்கவும், எர்ணாவூர்நாராயணன் களமிறங்கினார். இவர் சென்னையின் அடிதடி ஆசாமிகளில் ஒருவர். பண பலமும் ஆள் பலமும்கொண்டவர். நாடார் சமுதாயப் பிரமுகர். இவர் தனது "தொண்டர்களை" தரமணிக்கு அனுப்பி வைத்தார்.
ஸ்டீபனுக்கு ஆதரவாக நாடார் சமூகத்தின் முக்கியத் தலைவர் குதித்ததால் கோபிக்கு ஆதரவாக அவரது ஜாதியைச்சேர்ந்த காங்கிரஸ் வட்டச் செயலாளர் மணி, பாட்டாளி மக்கள் கட்சி வட்டச் செயலாளர் ஜனார்தனன், அதிமுகவட்டச் செயலாளர் எம்.ஜி.ஆர்.தாசன், மதிமுக வட்டச் செயலாளர் ஆகியோர் களம் இறங்கினர்.
அத்தோடு தில்லுமுல்லுகள் மூலம் தங்களது கட்சியினரையும் அவருக்கு வாக்களிக்க வைத்தனர். இதனால் வெற்றிபெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஸ்டீபன் தோல்வியைத் தழுவினார்.
வெறும் திமுக தொண்டர்களின் ஓட்டுக்கள் மட்டும் கிடைத்திருந்தாலே ஸ்டீபன் வெற்றி பெற்றிருப்பார். ஆனால்திமுக வேட்பாளரை தோற்கடிக்க, இன்னொரு திமுக வேட்பாளரே பிற கட்சியினரின் ஆதரவை நாடியது, தீவிரதிமுகவினர் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் எம்.பி., எம்.எல்.ஏ. தேர்தலில் நடைபெறுவது போல, பணம், மது உள்ளிட்ட ஐட்டங்களும் அதிக அளவில்புழங்கியதும் தரமணி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. சாதாரண வட்டச் செயலாளர் பதவிக்கே இத்தனைஅமர்க்களமா என்று அவர்கள் மூக்கில் விரல் வைத்துள்ளனர்.
கோபி வெற்றி பெற்ற விதம், நடந்து கொண்ட விதம் குறித்த முழு விவரத்தையும் திமுக தலைவர் கருணாநிதி,பொதுச் செயலாளர் அன்பழகன், இளைஞர் அணி செயலாளர் ஸ்டாலின் ஆகியோருக்கு ஸ்டீபன் தரப்பு பெரியபுகாராக அனுப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications