பதவி விலக மாட்டேன்: செஞ்சி ராமச்சந்திரன் திட்டவட்டம்
சென்னை & டெல்லி:
தனது உதவியாளர் ரூ. 4 லட்சம் லஞ்சம் வாங்கியதாக கூறப்படுவதில் தனக்கு எந்தவித சம்பந்தமும்இல்லை என்று கூறியுள்ள மத்திய நிதித்துறை இணையமைச்சர் செஞ்சி ராமச்சந்திரன், இதற்காகபதவியை ராஜினாமா செய்யப் போவதில்லை என்றும் திட்டவட்டமாத் தெரிவித்தார்.
வருமான வரித்துறை அதிகாரி ஒருவரின் இடமாற்றத்திற்காக ரூ. 4 லட்சம் லஞ்சம் பெற்றதாகசெஞ்சி ராமச்சந்திரனின் உதவியாளர் பெருமாள்சாமி என்ற பாபு கைது செய்யப்பட்டுள்ளர்.
நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் தொடர்பாக சென்னைஆடிட்டர் கிருஷ்ணமூர்த்தியும் கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து பதவி விலகுமாறுஇவருக்கு பிரதமர் வாஜ்பாய் உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
சென்னை விமான நிலையத்தில்..
இந் நிலையில் தனக்கும் இந்த சம்பவத்திற்கும் தொடர்பில்லை என்று செஞ்சி ராமச்சந்திரன்கூறியுள்ளார். சென்னையிலிருந்து இன்று காலை அவசரமாக டெல்லி புறப்பட்ட அவர் மீனம்பாக்கம்விமான நிலையத்தில் நிருபர்களிடம் பேசுகையில், நான் எக்காரணம் கொண்டும் பதவி விலக மாட்டேன்.
இந்த லஞ்சப் புகாரில் மதிமுகவுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. அதே போல கைது செய்யப்பட்டுள்ள சென்னைஆடிட்டர் கிருஷ்ணமூர்த்தியையும் எனக்குத் தெரியாது. லஞ்சம் வாங்கப்பட்டது குறித்து நேற்று மாலை தான்எனக்கே தெரியும் என்றார்.
டெல்லியில்...
டெல்லி வந்திறங்கிய ராமச்சந்திரன் அங்கு விமான நிலையத்தில் நிருபர்களிடம் பேசுகையில், இதில் எனக்கு எந்தச் சம்பந்தமும்இல்லை. என் மனசாட்சிப்படி நான் எந்தத் தவறும் செய்யவில்லை. இதனால் நான் பதவி விலக மாட்டேன். இது குறித்து என்னிடம்பிரதமர் ஏதும் பேசவில்லை. நான் அவருடன் பேசவில்லை.
பெருமாள்சாமி என்னுடைய அரசியல் உதவியாளர். அவருக்கும் எனது துறைக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது என்றார்.
அறிக்கையில்...
முன்னதாக சென்னையில் அவர் வெளியிட்ட அறிக்கையில், இந்த விஷயத்தில் சட்டம் தனது கடமையை செய்யும். எனக்கும், இதற்கும்எந்தவித சம்பந்தமும் இல்லை. தவறு செய்த எனது உதவியாளர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும்.
இது அரசியல் ரீதியில் பழிவாங்க நடந்துள்ள மோசடி. பொது வாழ்வில் தூய்மையைக் கடைபிடிப்பதில் நான் தீவிரமாக உள்ளவன் என்றுகூறியிருந்தார்.
ஆனால், மத்திய அமைச்சர் ராமச்சந்திரன் மட்டுமே பார்க்க வேண்டிய இந்திய நாட்டின் மிக முக்கியமான பைல்கள்கூட பெருமாள்சாமியின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன. இதனால் பெருமாள்சாமி தான் செஞ்சிராமச்சந்திரனுக்கு எல்லாமே என்பது நிரூபணமாகியுள்ளது.
பதவி விலக மாட்டேன் என்று இவர் அறிவித்துள்ளதால் பிரதமர் வாஜ்பாய்க்கு நெருக்கடி உருவாகியுள்ளது.இவரை நீக்கினால் மதிமுகவை பகைத்துக் கொள்ளும் சூழ்நிலை உருவாகும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications