புலிகள், ரணில், நார்வே, ஜப்பான் மீது சந்திரிகா பாய்ச்சல்

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

வட கிழக்கு மாகாணத்தில் புலிகள் தலைமையில் இடைக்கால நிர்வாகம் அமைக்கும் யோசனையை அதிபர்சந்திரிகா குமாரதுங்கா நிராகரித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் நார்வேயும், ஜப்பானும் தங்களது வரம்பையும் மீறி நடந்து கொள்வதாக சந்திரிகா குற்றம்சாட்டியுள்ளார்.

இடைக்கால நிர்வாகத்தை அமைத்தால் தான் அடுத்த மாதம் ஜப்பானில் நடக்கும் நிதியுதவி மாநாட்டில்பங்கேற்போம் என புலிகள் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர். இதன் பின்னர் தான் பேச்சுவார்த்தைகளிலும்பங்கேற்போம் என்று கூறியுள்ளனர்.

புலிகளின் இக் கோரிக்கைகைள ஏற்க பிரதமர் ரணில் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இனப் பிரச்சனைக்குஅமைதித் தீர்வு ஏற்பட கடுமையாக முயன்று வரும் நார்வே நாடும் புலிகளின் கோரிக்கையை ஏற்குமாறு ரணிலைவலியுறுத்தியுள்ளது. ஜப்பானும் இதே கருத்தைத் தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இந் நிலையில் வெளிநாட்டு நிருபர்களுக்கு சந்திரிகா அளித்த பேட்டி விவரம்:

புலிகள் வசம் வட-கிழக்கு இலங்கையை ஒப்படைக்க முடியாது. அவர்கள் கட்டுப்பாட்டில் இடைக்காலநிர்வாகத்தையும் அமைக்க முடியாது. முதலில் புலிகள் தீவிரவாத்தைக் கைவிட வேண்டும். தங்களிடம் உள்ளஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும்.

இனி எக்காலத்திலும் தனி ஈழம் கேட்கவே மாட்டோம் என்று அறிவிக்க வேண்டும். இதன் பின்னர் தான்அவர்களுக்கு அரசியல் அதிகாரத்தைத் தர முடியும்.

அமைதியை ஏற்படுத்தத் தான் நார்வே நாட்டின் உதவியை நான் நாடினேன். ஆனால், அவர்களை நடுவர்களாகஏற்க முடியாது. தங்களது வரம்பை மீறி அவர்கள் நடந்து கொள்கின்றனர். புலிகளின் கடற்படையை ஒருஅரசாங்கத்தின் படையாக ஏற்றுக் கொள்ளுமாறு இவர்கள் வலியுறுத்துகின்றனர்.

இது எப்படி சரியாகும். எந்த நாட்டிலாவது இரு கடற்படைகள் இருக்க முடியுமா?

இலங்கையின் ஒற்றுமை மற்றும் இறையாண்மையைக் கெடுக்க இவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை. எங்கள்நாட்டின் இறையாண்மை குறித்து நார்வே முடிவு செய்ய முடியாது.

புலிகளுடன் கொஞ்சிக் குலாவும் ஜப்பானின் செயலும் கண்டிக்கத்தக்கது. ஜப்பானுக்கு இந்த அமைதிப்பேச்சுவார்த்தைகளில் என்ன வகையான இடம் தரப்பட்டது என்று தெரியவில்லை. தாங்கள் வெறும்ஆலோசகர்களாக மட்டுமே இருப்பதாக ஜப்பானும் ரணிலும் கூறுகின்றனர்.

ஆனால், இப்போது அவர்களது செயல்பாட்டைப் பார்த்தால் அப்படித் தெரியவில்லை. புலிகளுடன கொஞ்சிக்குலாவுவது ஏன்?. நாட்டின் ஒற்றுமைக்கு ஊரு விளைவிக்கும் செயலில் ரணில் அரசு ஈடுபட்டால் அதைக்கலைக்கவும் நான் தயங்க மாட்டேன்.

புலிகளுடன் என்ன பேசப்படுகிறது என்பதைக் கூட ரணில் எனக்குச் சொல்வதில்லை என்றார் சந்திரிகா.

அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்சுடன் ரணில் விக்கிரமசிங்கே பேச்சு நடத்திய பின்னர் அமைதிப்பேச்சுவார்த்தைகளில் ஜப்பான் தலையிட்டது. புஷசின் வலியுறுத்ததால் ஒரு அமைதித் தூதரையும் ஜப்பான்நியமித்தது. இப்போது இந்த அமைதிப் பேச்சில் இந்தியாவையும் சேர்க்க வேண்டும் என சந்திரிகாவலியுறுத்துகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+