தக்காளிக்கே மதிப்பு வரும் போது.. தங்கத்துக்கு வராதா? தலைகீழான மார்க்கெட்! இனி ஆட்டம் ஆரம்பம் தானாம்!
சென்னை: கடந்த சில வாரங்களாக கடும் சரிவைச் சந்தித்து வந்த தங்கத்தின் விலை தற்போது திடீரென அதிகரித்து இருக்கிறது. மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றம், அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதம் தொடர்பான எதிர்பார்ப்பு மற்றும் தங்கத்தை வாங்கும் ஆர்வம் முதலீட்டாளர்களிடையே அதிகரித்தது உள்ளிட்ட அவற்றின் காரணமாக சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை கடந்த இரண்டு வாரங்களில் இல்லாத அளவுக்கு திடீரென உயர்ந்திருக்கிறது.
பொதுவாக உலக அளவில் போர் உள்ளிட்ட பரபரப்பான சூழல்கள் இருந்தால் பாதுகாப்பான முதலீடான தங்கத்தின் பக்கமே முதலீட்டாளர்கள் திரும்புவார்கள். ஆனால் அமெரிக்கா ஈரான் இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக கச்சா எண்ணெயின் விலை அதிகரித்தது.

இதனால் தங்கத்தின் மீதான மோகம் குறைந்ததால் அதன் விலை வெகுவாக குறைந்து வந்தது. இதனால் வரும் காலங்களில் தங்கத்தின் விலை மேலும் குறையலாம் என்ற எதிர்பார்ப்பு காரணமாக தங்கத்தை வாங்குவதை தவிர்த்து வந்தனர்.
தங்கம் விலை
இந்த நிலையில் சர்வதேச சந்தையில் கடந்த இரண்டு வாரங்களில் இல்லாத அளவுக்கு தங்கத்தின் விலை திடீரென உயர்ந்திருக்கிறது. புதன்கிழமை வர்த்தகம் துவங்கிய போது ஸ்பார்ட் தங்கத்தின் விலை 0.9 சதவீதம் உயர்ந்து ஒரு அவுன்ஸ் 4,112 டாலருக்கு விற்பனையாது. இது ஜூலை 7ஆம் தேதிக்கு பிறகு பதிவான மிக அதிகமான விலை என்பது குறிப்பிடத்தக்கது.
தங்கம் விலை உயர்வு
அதேபோல ஆகஸ்ட் மாத அமெரிக்க தங்க பியூச்சர்ஸ் ஒப்பந்தங்களில் விலையும் 1 சதவீதம் உயர்ந்து ஒரு அவுன்ஸ் 416 டாலருக்கு வர்த்தகமானது. கடந்த வாரம் மத்திய கிழக்கு பகுதியில் ஏற்பட்ட போர் பதற்றம், கச்சா எண்ணெய் விலையை கணிசமாக உயர்த்தியது. இதனால் பணவீக்கம் அதிகரிக்கலாம் என்ற அச்சமும் அமெரிக்கா வட்டி விகிதம் மேலும் உயர வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டதும் தங்கத்தின் விலையில் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
முதலீட்டாளர்கள்
இதன் காரணமாக கடந்த ஜூன் மாத தொடக்கத்திற்கு பிறகு ஒவ்வொரு வாரமும் தங்கத்தின் விலை சரிவை சந்தித்து வந்தது. ஆனால் தற்போது விலை குறைந்திருக்கும் நிலையில் முதலீட்டாளர்கள் மீண்டும் தங்கத்தை வாங்க தொடங்கியுள்ளனர் இதனால் தங்கத்தின் விலை மீண்டும் ஏற்றம் கண்டுள்ளது.
அமெரிக்கா - ஈரான்
இதுதொடர்பாக பேசியுள்ள கேசிஎம் டிரேட் நிறுவனத்தின் தலைமை சந்தை ஆய்வாளர் டிம் வாட்டரர், "சமீபத்தில் தங்கம் விலை சரிவுக்குப் பிறகு முதலீட்டாளர்கள் தங்கத்தை நல்ல முதலீட்டு வாய்ப்பாக கருதி வாங்கத் தொடங்கியுள்ளனர். அதே நேரத்தில், அமெரிக்கா - ஈரான் இடையே பேச்சுவார்த்தை நடைபெறலாம் என்ற எதிர்பார்ப்பும் தங்க சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது" என்றார்.
கச்சா எண்ணெய்
அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ, ஈரான் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண அமெரிக்கா இன்னும் தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தாலும், ஈரான் அதில் தீவிரம் காட்டவில்லை என்றும் கூறியுள்ளார். மற்றொரு புறம், சவுதி அரேபியாவில் இருந்து ஆசிய நாடுகளுக்கு கச்சா எண்ணெய் ஏற்றிச் சென்ற மூன்று எண்ணெய் கப்பல்கள், ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் அச்சுறுத்தல் காரணமாக செங்கடலில் தங்கள் பயண திசையை மாற்றியுள்ளன. இதனால் உலகளாவிய எரிசக்தி விநியோகம் பாதிக்கப்படுமோ என்ற கவலை அதிகரித்துள்ளது.
பெடரல் ரிசர்வ்
இது ஒருபுறம் இருக்க அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி கூட்டம் அடுத்த வாரம் நடைபெற இருக்கும் நிலையில் முதலீட்டாளர்கள் அதனை மிகவும் உன்னிப்பாக கவனிக்க தொடங்கி இருக்கின்றனர். உலக அளவில் பிரபலமான செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ் நடத்திய கருத்துக்கணிப்பின்படி 2026 முழுவதும் அமெரிக்க பெடரல் ரிசர்வ் தனது அடிப்படை வட்டி வீதத்தை மாற்றாமல் வைத்திருக்கலாம் என பொருளாதார நிபுணர்கள் சொல்கிறனர்.
தங்கத்தில் முதலீடு
இருந்தாலும் இந்த ஆண்டில் மீண்டும் ஒருமுறை வட்டி விகிதம் உயர வாய்ப்பு இருப்பதாகவும் பெரும்பாலானோர் கருத்து தெரிவித்திருக்கின்றனர். பொதுவாக அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதம் நீண்ட காலம் உயர்ந்த நிலையில் நீடித்தால் வட்டி வருமானம் தராத தங்கத்தில் முதலீடு செய்வதற்கான ஆர்வம் குறையும். இருந்தபோதும் அரசியல் பதற்றம் அதிகரிக்கும் சூழலில் பாதுகாப்பான முதலீடாக தங்கமே இருக்கும். இதனால் அதன் தேவையும் தொடர்ந்து உயரும். இதனால் தான் தற்போது விலை உயர்ந்திருக்கிறது என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.
வெள்ளி - பிளாட்டினம்
தங்கம் மட்டுமல்லாது விலை மதிப்பு மிக்க மற்ற உலோகங்களின் விலையும் இன்று உயர தொடங்கியது. வெள்ளி விலை 0.7 சதவீதம் உயர்ந்து ஒரு அவுன்ஸ் 59.18 டாலருக்கு வர்த்தகமானது. பிளாட்டினம் 1.2 சதவீதம் உயர்ந்து 1643 டாலருக்கும், பலேடியம் 1.5% உயர்ந்து 1300 டாலருக்கும் வர்த்தகமானது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
