ஒரே நாளில் 2 பெயிலியர்.. கோட்டை விட்ட போலீஸ்.. கரப்பான் பூச்சி கட்சியை குறைத்து மதிப்பிட்ட உளவு துறை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நீட் லீக் தொடர்பாக கரப்பான் பூச்சி கட்சி நடத்தி வரும் போராட்டம் நாளுக்கு நாள் பெரிதாக வெடித்து வருகிறது. டெல்லியில் இதனால் உச்சக்கட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இந்த போராட்டத்தின் தீவிரத்தை டெல்லி போலீசும், மத்திய அரசும் முன்கூட்டியே சரியாக கணிக்கத் தவறிவிட்டதா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. கடந்த 15 ஆண்டுகளில் டெல்லியில் நடந்த மிக பெரிய மக்கள் எழுச்சி போராட்டங்களில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது.

டெல்லியில் கடந்த காலங்களில் நிர்பயா போராட்டம், விவசாயிகள் போராட்டம் போன்றவை டெல்லியிக்கு கடும் சவாலாக அமைந்திருந்தன. அதேபோல் ஜூலை 20ம் தேதி நடைபெற்ற கரப்பான் பூச்சி கட்சியின் நாடாளுமன்ற முற்றுகை பேரணியிலும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் திரண்டனர். போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டதில் சுமார் 200 பேர் காயமடைந்தனர்.

CJP NEET Protest Delhi Police NEET

கரப்பான் பூச்சி கட்சி

அதேநேரம் இந்த பேரணி திடீரென அறிவிக்கப்பட்டதல்ல. சுமார் மூன்று வாரங்களுக்கு முன்பே நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடைபெறும் என கரப்பான் பூச்சி கட்சி அறிவித்திருந்தது. இதற்கிடையில் ஜூன் 28ம் தேதி கல்வியாளர் சோனம் வாங்சுக், நீட் வினாத்தாள் லீக் விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் தொடங்கினார். ஆரம்பத்தில் இந்த போராட்டத்திற்குப் பெரிய அளவில் ஆதரவு இல்லை என்பதே உண்மை.

முதல் தவறு

ஆனால், நாட்கள் செல்ல செல்ல ஆதரவு மெல்ல அதிகரித்தது. அதிலும் குறிப்பாக ஜூலை 18ம் தேதி அதிகாலை சோனம் வாங்சுக்கை ஜந்தர் மந்தரில் இருந்து போலீசார் அப்புறப்படுத்தி, சப்தர்ஜங் மருத்துவமனைக்கு மாற்றிய சம்பவம் போராட்டத்திற்கு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது. பல நூறு இளைஞர்கள் ஜந்தர் மந்தரில் திரள இந்தச் சம்பவம் காரணமாக அமைந்தது. ஞாயிற்றுக்கிழமை மாலை வரை மட்டும் சுமார் 5,000 பேர் இருந்ததாகக் கூறப்படுகிறது. அதிகபட்சம் 7,000 பேர் தான் திங்கள்கிழமை வருவார்கள் என்றே டெல்லி உளவு துறை கனித்திருந்தது.

ஒரு லட்சம் பேர்

ஆனால் திங்கட்கிழமை நிலைமை முற்றிலும் மாறியது. நாடாளுமன்றத்தை நோக்கிய சாலைகளில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் வரை திரண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மாணவர்கள், பெற்றோர், தொழில்முனைவோர், பெண்கள் என பல்வேறு தரப்பினரும் ஜந்தர் மந்தரை நோக்கி திரண்டு கொண்டே இருந்தனர். குறிப்பாக 12 முதல் 17 வயதுடைய சிறுவர்களும் கூட போராட்ட களத்திற்கு வந்தனர். அண்டை மாநிலங்களிலிருந்தும் பலர் வந்து போராட்டத்தில் இணைந்தனர். இதற்கு நடுவே ஜந்தர் மந்தர் அருகே கற்களுடன் லாரி ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த லாரி எப்படி அங்கு வந்தது என்பது குறித்து கரப்பான் பூச்சி கட்சியினரும், போலீசாரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி குற்றம்சாட்டினர்.

மத்திய அரசு

முதலில் திங்கள் பிற்பகலில் போராட்டம் முடிந்துவிடும் என்றே போலீசார் நினைத்தனர். இதன் காரணமாகவே முதலில் சுமார் 2,000 போலீசார் மட்டுமே களமிறக்கப்பட்டனர். போலீஸ் சொன்ன உளவு தகவலை வைத்து மத்திய உள்துறை அமைச்சகமும் காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மட்டுமே இணைய சேவையை நிறுத்த உத்தரவிட்டிருந்தது. ஆனால் போராட்டம் தீவிரமடைந்ததால் இணைய சேவை மாலை 6 மணி வரை முடக்கப்பட்டது மக்கள் அதிகளவில் வந்து கொண்டே இருந்ததால் 5 மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டன.

நிலைமை மோசமடைந்ததை தொடர்ந்து, மத்திய அரசு முதல் முறையாக பேச்சுவார்த்தைக்கு இறங்கி வந்தது. கரப்பான் பூச்சி கட்சி செய்தித் தொடர்பாளர்கள் சவுரவ் தாஸ் மற்றும் அஷுதோஷ் ரங்கா ஆகியோர் மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டாவை சந்தித்து மூன்று கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினர். எனினும், இந்த கோரிக்கைகளுக்கு மத்திய அரசு உடனடியாக எந்த உறுதியும் அளிக்கவில்லை.

2வது தவறு

மறுபுறம் பிற்பகலில் டெல்லி போலீசார் ஜந்தர் மந்தரில் இறங்கி தடியடி நடத்தியது. போராட்ட பந்தல் கலைக்கப்பட்டது. அங்கு திரண்டிருந்த இளைஞர்கள் விரட்டி அடிக்கப்பட்டனர். அத்தோடு போராட்டம் முடிந்துவிடும் என்றே போலீசார் நினைத்தனர். ஆனால், இந்த முறையும் போலீஸ் கணிப்பு தப்பாகி போனது. இரவோடு இரவாக மீண்டும் போராட்ட களத்திற்கு இளைஞர்கள் திரண்டனர். மீண்டும் தற்காலிக பந்தல் அமைத்து போராட்டத்தை ஆரம்பித்தனர். கொட்டும் மழையிலும் போராட்டம் தொடர்ந்தது.

நேற்றைய தினம் எந்தவொரு அசம்பாவிதமும் இல்லாமல் போராட்டம் நடந்தது. நேற்று மீண்டும் நாடாளுமன்ற முற்றுகை இருக்கும் என சொல்லப்பட்ட நிலையில், ஆனால் கரப்பான் பூச்சி கட்சி அதை மறுத்தது. அமைதியான முறையில் போராட்டம் நடந்தது. இதற்கிடையே இன்றும் போராட்டம் தொடர்ந்து வருகிறது. இப்படி தான் டெல்லி உளவு துறை ஒரு முறை இல்லை.. இரண்டு முறை மாணவர் போராட்டத்தை குறைத்து மதிப்பிட்டு பிரச்சினையில் சிக்கிக் கொண்டு இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+