வேறு யாரையும் அமைச்சராக்க மதிமுக கோராது
சென்னை:
உதவியாளர் மீதான ஊழல் புகாரால் பதவி விலகிய செஞ்சி ராமச்சந்திரனுக்கு மாற்றாக வேறு யாரையும் மதிமுகசார்பில் அமைச்சராக்க மாட்டோம் என அக் கட்சி அறிவித்துள்ளது.
வேலூர் சிறையில் உள்ள மதிமுக தலைவர் வைகோவைச் சந்தித்துவிட்டு வந்த கட்சியின் அவைத் தலைவர்எல்.கணேசன் இன்று நிருபர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தெகல்கா ஊழல் குற்றச்சாட்டு காரணமாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் பதவியை ராஜினாமாசெய்தார். பின்னர் அவர் மீதான குற்றம் தவறானது என்பதால் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்பட்டார். அதே தான்இப்போதும் நடக்கும்.
செஞ்சி ராமச்சந்திரன் குற்றமற்றவர். அவர் எந்தத் தவறும் செய்யவில்லை. பிரதமருக்கு தர்மசங்கடமோ,நெருக்கடியோ தர வேண்டாம் என்பதால் தான் பதவி விலகினார். செஞ்சியாரிடம் உதவியாளராக இருந்தபெருமாள்சாமியால் மதிமுகவுக்கு கெட்ட பெயர் ஏற்பட்டுவிட்டது உணமை தான். சி.பி.ஐ. தனது விசாரணையைமுடித்தால் செஞ்சி ராமச்சந்திரன் குற்றமற்றவர் என்பது நிரூபணமாகும். இதனால் சிபிஐ தனது விசாரணையைவிரைந்து முடிக்க வேண்டும்.
இந்தச் சம்பவத்தால் வைகோ அதிரிச்சியடைந்துள்ளார் என்றார் கணேசன்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications