மதுரையில் இன்னொரு பயங்கரம்: ரெளடிகளால் வியாபாரி நடுரோட்டில் வெட்டிக் கொலை
மதுரை:
தா.கிருட்டிணன் படுகொலைச் சம்பவ பரபரப்பு அடங்குவதற்குள் மதுரையில் இன்னொரு பயங்கரக்கொலை நடந்துள்ளது.
மதுரை மேல அனுப்பானடி பகுதியில் மளிகைக் கடை வைத்திருந்த தங்கராஜ் என்பவர் அந்தப்பகுதியைச் சேர்ந்த ரவுடிகளால் நடுரோட்டில் விரட்டி விரட்டி வெட்டிக் கொல்லப்பட்டார்.
மதுரையில் கடைக்காரர்களை மிரட்டி மாமூல் வசூலிக்கும் ரவுடிகள் உள்ளனர். வசூலில் ஒருபகுதியை போலீசாருக்கும் கொடுத்து விடுவார்கள். இதனால் இந்தக் கும்பல்களை ஒழிக்கமுடியவில்லை.
இந்தக் கும்பல்களுக்கு மாமூல் கொடுப்பதைத் தவிர்க்க வியாபாரிகளே ஒன்று சேர்ந்து இதற்குஎதிரான நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுள்ளனர். மாமூல் தர மாட்டோம் என கடைகளில் ஒட்டிவைத்துள்ளனர். இதனால் வியாபாரிகளுக்கும் ரவுடிகளுக்கும் இடையே அவ்வப்போது மோதல்நடப்பது வழக்கம்.
இந் நிலையில் மேல அனுப்பானடி வியாபாரிகள் சங்கத் தலைவராக இருந்த தங்கராஜ் கொலைசெய்யப்பட்டுள்ளார்.
அந்தப் பகுதியைச் சேர்ந்த சில ரவுடிகள் கடைக்காரர்களிடம் பணம் கேட்டு மிரட்டியதையடுத்துதங்கராஜ் அதைத் தட்டிக் கேட்டார். இதனால் அவருக்கும் ரவுடிகளுக்கும் இடையே தகராறுஏற்பட்டது.
இந் நிலையில் இன்று காலை 9.30 மணியளவில் தங்கராஜ் கடைக்கு வந்த சில ரவுடிகள் அவரிடம்தகராறு செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து தங்கராஜுக்கும் ரவுடிகளுக்கும் இடையே வாக்குவாதம்ஏற்பட்டுள்ளது.
ஆத்திரமடைந்த ரவுடிகள் தங்களிடமிருந்த அரிவாளை எடுத்து தங்கராஜை வெட்டியுள்ளனர்.அவர்களிடமிருந்து தப்பிக்க தங்கராஜ் ஓடியுள்ளார். ஆனால் விடாமல் துரத்திய ரவுடிக் கும்பல்,தங்கராஜை ரோட்டிலேயே துடிக்கத் துடிக்க வெட்டிக் கொன்றனர்.
வியாபாரி கொலை செய்யப்பட்ட தகவல் அப்பகுதியில் பரவியதும், கடைகள் அடைக்கப்பட்டன.
ரவுடிக் கும்பலைப் பிடிக்க போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக காவல்துறைஅறிவித்துள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications