மும்பை விமான நிலையத்தில் கமாண்டரை சுட்டுக் கொன்ற வீரர்: சக வீரர்களை சிறை பிடித்தார்
மும்பை:
மும்பை சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மத்திய தொழிற்படைக் காவலர் தனதுகமாண்டரை சுட்டுக் கொன்றுவிட்டு 5 சக வீரர்களை சிறை பிடித்தார்.
4 பெண் வீராங்கனைகள் உள்ளிட்ட அந்த 5 பேரையும் அவர் துப்பாக்கி முனையில் பிணைக் கைதிகளாக சிறைவைத்தார்.
கிட்டத்தட்ட 8 மணி நேர போராட்டத்துக்குப் பின் அவர் இன்று அதிகாலை அதிகாரிகளிடம் சரணடைந்தார்.
மும்பை விமான நிலையத்தின் பாதுகாப்பு மத்திய தொழில்துறைப் பாதுகாப்புப் படையின் வசம் உள்ளது. நேற்றிரவுபாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ராஜ் நாம்தியோ (வயது 22) வீரர் சில நாள் விடுமுறை கேட்டுள்ளார்.
ஆனால், அவருக்கு விடுமுறை தர துணை கமாண்டர் கரன்தேக்கர் மறுத்துவிட்டார். பாதுகாப்புப் பணிக்கு போதியஆட்கள் இல்லாததால் தொடர்ந்து பணியில் இருக்குமாறு கூறினார்.
இதனால் வெறுப்படைந்த ராம்தேவ் தனது சக வீரரிடம் இருந்த துப்பாக்கியைப் பறித்து துணைக் கமாண்டரைசுட்டுக் கொன்றார். பின்னர் 4 பெண் வீராங்கனைகள் உள்ளிட்ட 5 பேரை துப்பாக்கி முனையில் பிணைக்கைதிகளாகப் பிடித்தார். அவர்களை ஒரு அறைக்குள் தள்ளிச் சென்றார்.
பின்னர் அந்த அறையை உள் பக்கமாகப் பூட்டிக் கொண்டார்.
இதையடுத்து விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கமாண்டோ படைகளும் கூடுதல் போலீசாரும்குவிக்கப்பட்டனர். சம்பவம் நடந்த விமான நிலைய 2 ஏ டெர்மினல் மூடப்பட்டது. விமானங்கள் 2 சி டெர்மினலில்இருந்து இயக்கப்பட்டன.
ராம்தேவுடன் அதிகாரிகள் நீண்ட நேரம் பேச்சு நடத்தியும் பலன் ஏற்படவில்லை. பத்திரிக்கையாளர்களைச்சந்தித்துப் பேச அனுமதிக்க வேண்டும் என்ற அவரது கோரிக்கையை அதிகாரிகள் நிராகரித்தனர்.
இதையடுத்து அவர் மேலும் சிலரையும் கொல்லும் சூழல் ஏற்பட்டது. இதையடுத்து கமாண்டோ தாக்குதல் நடத்திஅவரைக் கொன்றுவிட்டு பிணைக் கைதிகளை மீட்க உத்தரவிடப்பட்டது. மாலையில் தொடங்கிய இந்த நாடகம்நள்ளிரவையும் தாண்டி நடந்தது.
இந் நிலையில் கடைசி முயற்சியாக அவரது பெற்றோரை வைத்து ராம்தேவுடன் சமாதானம் பேச முடிவுசெய்யப்பட்டது. இவரது தந்தையும் தொழில்துறை பாதுகாப்புப் படை வீரர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.இவரது பெற்றோர்கள் விமான நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.
அவர்கள் சென்று பேச்சு நடத்திய பின்னர் தான் சரணடைய ராம்தேவ் ஒப்புக் கொண்டார். பின்னர் மும்பை துணைகமிஷனரும் சென்று பேச்சு நடத்தி ராம்தேவிடம் இருந்த துப்பாக்கியை வாங்கினார்.
இதையடுத்து ராம்தேவை போலீசார் கைது செய்து பிணைக் கைதிகளாக இருந்த 5 தொழிற்படை வீரர்களையும்மீட்டனர்.
மிகக் கூடுதலான வேலை நேரம், ஓய்வே இல்லாத கடும் வேலை ஆகியவற்றின் காரணமாக ராம்தேவ் மனநெருக்கடிக்கு ஆளாகி இந்தச் செயலில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. விமான நிலையங்களைத் தீவிரவாதிகள்தாக்கலாம் என்பதால் 24 மணி நேரமும் தீவிரமான கண்காணிப்புப் பணியில் தொழிற்படைக் காவலர்கள்ஈடுபடுத்தப்படுகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications