போலீஸ் காவலில் அழகிரி
மதுரை:
தா.கிருட்டிணன் படுகொலை தொடர்பாக மேலும் விசாரணை நடத்துவதற்காக மு.க.அழகிரியைஒரு வாரத்திற்கு போலீஸ் காவலில் எடுக்க மதுரை போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
இப்போது அவர் நீதிமன்றக் காவலில் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நீதிமன்றக் காவலில்வைக்கப்பட்டவரிடம் போலீசார் சிறையில் வைத்து விசாரணை நடத்த முடியாது. போலீஸ் காவலில்வைத்தால் தான் சிறையிலோ அல்லது காவல் நிலையத்துக்கோ கொண்டு சென்று விசாரிக்க முடியும்.
இந்தக் கொலைக்கு அழகிரி தான் சதித் திட்டம் தீட்டினார் என்று போலீசார் அறிவித்துள்ளனர்.மேலும் கொலையாளி முபாரக் உள்பட 4 பேரைக் கைது செய்துவிட்டனர். இன்னொரு கொலையாளிஇப்ராகிம் சென்னையில் சரணடைந்துவிட்டார்.
இவர்களிடம் நடத்திய விசாரணையில் படுகொலை தொடர்பாக பல்வேறு தகவல்கள் தங்களுக்குக்கிடைத்துள்ளதாகவும் இதன் அடிப்படையில் அழகிரியிடம் மேலும் விசாரணை நடத்த வேண்டிஇருப்பதாகவும் போலீஸார் கூறுகின்றனர்.
இதனால் அழகிரியை ஒரு வாரத்திற்கு போலீஸ் காவலில் எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும்கூறுகின்றனர்.
இதுதொடர்பாக இன்று மதுரை 6-வது குற்றவியல் நீதிமன்றத்தில் போலீசார் மனு தாக்கல் செய்யஉள்ளனர்.
அதே நேரத்தில் தன்னை ஜாமீனில் விடுவிக்கக் கோரி அழகிரி தாக்கல் செய்துள்ள மனுவும் இதேநீதிமன்றத்தில் இன்றே விசாரணைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications