காகித கிட்டங்கியில் பயங்கர தீ: 600 டன் இறக்குமதி காகிதங்கள் நாசம்
சென்னை:
சென்னை மூலக்கடை பகுதியில் உள்ள காகிதக் கிட்டங்கியில் ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில் 600டன் எடையுள்ள வெளிநாட்டு காகிதங்கள் எரிந்து சாம்பலாயின. இதன் மதிப்பு ரூ. 20 லட்சமாகும்.
மூலக்கடை பகுதியில் ஒரு தனியார் காகித விற்பனை நிறுவனம் உள்ளது. ரஷ்யா, ஜெர்மன் உள்படபல வெளிநாடுகளிலிருந்தும் காகிதங்களை கோடிக்கணக்கான ரூபாய்க்கு இறக்குமதி இந்தியாமுழுவதும் விற்று வருகிறது இந்த நிறுவனம்.
சிவகாசி உள்ளிட்ட பல்வேறு நகர்களில் உள்ள முக்கிய பிரிண்டிங் நிறுவனங்கள், பத்திரிகைகள் ஆகியவைஇவர்களிடம் தான் காகிதங்கள் வாங்குகின்றன. இவர்களது கிட்டங்கியும் கடையின் பின்பகுதியிலேயே உள்ளது.
இன்று காலை 9.45 மணியளவில் இந்த நிறுவனத்தின் கிட்டங்கியில் தீ விபத்து ஏற்பட்டது. மிகவேகமாகப் பரவிய இந்தத் தீயில் 600 டன் இறக்குமதிக் காகிதங்கள் எரிந்து சாம்பலாயின.
இதன் மதிப்பு ரூ. 20 லட்சமாகும். தீயணைப்புப் படையினர் 10 வண்டிகளுடன் வந்து நெடுநேரம்போராடித் தான் தீயை அணைக்க முடிந்தது. இதில் ஒரு வீரருக்கு தீக்காயம் ஏற்பட்டது. இதையடுத்துஅவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கிட்டங்கியில் 2,000 டன் காகிதங்கள் இருப்பு வைக்கப்பட்டிருந்தன. இதில் 600 டன் காகிதங்கள்கருகிவிட்டன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications