கரூரில் பயங்கர விபத்து: ராட்சத ராட்டினம் சரிந்து விழுந்து 10 பேர் சாவு
கரூர்:
கரூரில் வீசிய சூறாவளிக் காற்றில் ராட்சத ராட்டினம் கவிழ்ந்து விழுந்ததில் 10 பேர் பரிதாபமாகஉயிரிழந்தனர். 40க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
கரூரில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, அமராவதி ஆற்றின் கரையில் மிகப்பெரிய ராட்சத ராட்டினம் (ஜயன்ட் வீல்) அமைக்கப்பட்டிருந்தது.
இதுதவிர நகர் முழுவதிலும் பல்வேறு கேளிக்கை நிகழ்ச்சிகளும் நடந்தன.
இந் நிலையில் நேற்றிரவு திடீரென கன மழை பெய்யத் தொடங்கியது. பனிக் கட்டிகளுடன் மழைபெய்தது. மழையை ரசித்த வண்ணம் மக்கள் திருவிழாவைக் கொண்டாடிக் கொண்டிருந்தனர்.
மழை பெய்தபோதும் கூட ராட்டினமும் தொடர்ந்து இயக்கப்பட்டது. அப்போது திடீரென வேகமாககாற்று வீசத் தொடங்கியது. ஆனாலும் ராட்டின உரிமையாளர் அதை நிறுத்தாமல் தொடர்ந்துஇயக்கினார்.
இந் நிலையில் காற்றின் வேகம் அதிகரித்தது. பயங்கர சூறாவளிக் காற்று வீசியது. இதில் சுற்றிக்கொண்டிருந்த ராட்சத ராட்டினம் நிலை குலைந்து அப்படியே சரிந்தது.
முழுக்க முழுக்க இரும்பால் ஆன பல நூறு டன் எடை கொண்ட அந்த ராட்டினம் சரிந்ததில் 10 பேர்உடல் நசுங்கி இருந்தனர். ராட்டினத்தில் இருந்தவர்கள், கீழே நின்றிருந்தவர்கள், அதை இயக்கிக்கொண்டிருந்தவர்கள் என அனைத்துத் தரப்பிலும் உயிர்ப் பலிகள் ஏற்பட்டன.
உடனடியாக தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.பொதுமக்களும் ராட்டினத்திற்குள் சிக்கியிருந்தவர்களை மீட்ட்டனர்.
இச் சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உள்பட 10 பேர் பரிதாபமாக இறந்தனர். 40க்கும்மேற்பட்டோருக்கு படுகாயம் ஏற்பட்டது.
காயமடைந்தவர்கள் அனைவரும் கரூர் அரசு மருத்துவமனை மற்றும் பல்வேறு தனியார்மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். மிக மோசமாகக் காயமடைந்தவர்கள் கோவைமற்றும் திருச்சிக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
இந்தத் துயரச் சம்பவத்தால் கரூர் நகரமே சோகத்தில் மூழ்கியுள்ளது. சூறாவளிக் காற்று பலமாகஇருந்ததாலும், ஆற்றங்கரையில் தரைப் பகுதியில் போதிய கெட்டித் தன்மை இல்லாத இடத்தில்ராட்டினத்தை நிறுவியதும் தான் இந்தக் கோர விபத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
ஜெயலிலதா உதவி:
இந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 50,000 வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.படுகாயமடைந்தவர்களுக்கு ரூ. 15,000மும் லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ. 6,000மும் வழங்க அவர் உத்தரவிட்டுள்ளார்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications