கள்ளக் காதலனுடன் வாழ்ந்த தாயை கொலை செய்த மகன்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தந்தையைப் பிரிந்து கள்ளக் காதலனுடன் வாழ்ந்து வந்த தாயை மகனே வெட்டிக் கொலை செய்தார்.

சென்னை ராயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் டென்சிங். இவரது மனைவி விக்டோரியா. இருவரும்சில ஆண்டுகளுக்கு முன் பிரிந்து விட்டனர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

கணவரைப் பிரிந்து வந்த விக்டோரியா அதே பகுதியைச் சேர்ந்த ஜோசப் லூயிஸ் என்பவருடன்தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு அவருடன் வாழ்ந்து வந்தார். இதையடுத்து, விக்டோரியாவின்மகன் ராக்பெல்லரை அப்பகுதியைச் சேர்ந்த வாலிபர்கள் கேலியும், கிண்டலும் செய்து வந்தனர்.

இதனால் மன வேதனை அடைந்த ராக்பெல்லர், ஜோசப்பை விட்டு விலகி வந்து விடுமாறு தனதுதாயை வலிறுத்தி வந்தார். ஆனால் அவர் கேட்கவில்லை என்று தெரிகிறது.

இதைத் தொடர்ந்து, நேற்று காலை ஜோசப்பின் வீட்டுக்குச் ராக்பெல்லர் சென்றார். அங்குவிக்டோரியா மட்டும் இருந்தார். தந்தையுடன் சேர்ந்து வாழலாம், என்னுடன் வா என்று ராக்பெல்லர்கூப்பிட்டுள்ளார். ஆனால் விக்டோரியா வர மறுத்து விட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த ராக்பெல்லர் அங்கு கிடந்த இரும்புக் கம்பியால் தனது தாயை சரமாரியாகதாக்கினார். இதில் மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் மிதந்தார் விக்டோரியா.

பின்னர் தான் கையோடு கொண்டு சென்ற கத்தியால், தாயின் கழுத்தை அறுத்தார் ராக்பெல்லர்.

அப்போது விக்டோரியாவின் அலறல் சப்தம் கேட்டு அங்கு ஓடிவந்த அப்பகுதியைச் சேர்ந்தவர்கள்,ராக்பெல்லரிடம் இருந்து அவரது தாயை மீட்க முயன்றனர். ஆனால், கத்தியுடன் நின்றிருந்த அவர்மிரட்டவே வீட்டுக் கதவை வெளிப்பக்கம் பூட்டி விட்டு போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.

இதனால் வீட்டுக்குள்ளேயே ராக்பெல்லர் மாட்டிக் கொண்டார். போலீஸார் விரைந்து வந்துராக்பெல்லரைக் கைது செய்தனர். கொலையாகிக் கிடந்த விக்டோரியாவின் உடலை போஸ்ட்மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்தனர்,

தாயை கொலை செய்த ராக்பெல்லருக்கு 19 வயதுதான் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+