நாமக்கல் அருகே சுமோ- லாரி மோதல்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

நிாமக்கல்:

நாமக்கல் அருகே வேனும், லாரியும் பயங்கரமாக மோதிக் கொண்டதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த4 பேர் பலியானார்கள்.

வேலூர் மாவட்டம் ஆம்பூரைச் சேர்ந்தவர் தொழிலதிபர் முனவர் பாட்சா. இவர் ஆம்பூரில் சிட்டிஎன்டர்பிரைசஸ் என்ற தோல் தொழ்ற்சாலை நடத்தி வந்தார்.

தனது குடும்பத்தினர் 12 பேருடன் டாடா சுமோ காரில் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றார்.

கொடைக்கானலில் இருந்து அவர்கள் ஆம்பூர் திரும்பிக் கொண்டிருந்தனர். இன்று அதிகாலை 4.30மணிக்கு நாமக்கல் அருகே கருங்கல்பாளையம் என்ற இடத்தில் வேன் வந்தபோது, எதிரே வந்தலாரி பயங்கரமாக மோதியது.

இதில் முனவர் பாட்சா (68), அவரது மனைவி தில்ஷாத் பேகம் (52), மகள் குல்ரானா (29) மற்றும்இரண்டரை வயது பேரன் முகம்மத் ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

முனவர் பாட்சாவின் மகன், மருமகள், பேரக் குழந்தைகள், வேலைக்காரப் பெண், டிரைவர் உள்பட 8பேர் படுகாயமடைந்தனர்.

இவர்கள் நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பின்னர் அவர்கள்தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுவிட்டனர்.

விபத்துக்கு காரணமாக இருந்த லாரியின் டிரைவர் அங்கிருந்து தப்பியோடி விட்டான். வேனில் ரத்தவெள்ளத்தில் காயமடைந்து கிடந்தவர்களை அவன் மீட்கக் கூட இல்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+