தமிழக அமைச்சரவை நாளை மீண்டும் மாற்றம்: 3 பேருக்கு கல்தா- 5 பேர் சேர்ப்பு
சென்னை:
தமிழக அமைச்சரவை நாளை மாற்றி அமைக்கப்படவுள்ளது. புதிதாக 5 பேர் சேர்க்கப்படுகின்றனர். 3 பேர் நீக்கப்படுகின்றனர்.
செய்தித் தொடர்புத்துறை துறை அமைச்சர் கே.கே.பாலசுப்பிரமணியம், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் வடிவேலு, பிற்பட்டோர் நலத் துறை அமைச்சர் பாப்பா சுந்தரம் ஆகியோர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்படுகின்றனர்.
முன்பு அமைச்சரவையில் இடம் பெற்று பின்னர் நீக்கப்பட்டிருந்த தளவாய் சுந்தரம் மற்றும் பாண்டுரங்கன் ஆகியோருக்கு மீண்டும் அமைச்சரவையில் இடம் தரப்படவுள்ளது. தளவாய்க்கு நலத்துறை வழங்கப்படுகிறது. பாண்டுரங்கனுக்கு ஊரக வளர்ச்சித்துறை ஒதுக்கப்படுகிறது.
தாமரைக்கனியின் மகன் இன்பத் தமிழனும் அமைச்சராகிறார். அவருக்கு விளையாட்டுத் துறை வழங்கப்படுகிறது. இவர்கள் தவிர அன்பழகன், அண்ணாவி ஆகியோரும் அமைச்சர்களாகின்றனர். இதில் அன்பழகனுக்கு செய்தித் தொடர்புத்துறையும், அண்ணாவிக்கு பிற்பட்டோர் நலத்துறையும் தரப்படுகிறது.
நலத்துறையும் விளையாட்டுத்துறையும் இதுவரை அமைச்சர் செம்மலையிடம் இருந்தன. இனி அவர் கல்வியமைச்சராக மட்டும் தொடர்வார்.
மேலும் இதுவரை அமைச்சர் நைனார் நாகேந்திரனிடம் இருந்த மின்சாரத்துறை மீண்டும் சட்ட அமைச்சர் ஜெயக்குமாரிடம் தரப்படுகிறது.
இன்று மாலை திடீரென கவர்னர் மாளிகைக்குச் சென்ற முதல்வர் ஜெயலலிதா இந்த புதிய அமைச்சர்கள் பட்டியலைத் தந்தார். நாளை இவர்கள் பதவியேற்பு நிகழ்ச்சி பிற்பகலில் நடக்கிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications