மனைவி, 2 மகள்களைக் கொன்று விவசாயி தற்கொலை
பட்டுக்கோட்டை:
பட்டுக்கோட்டையில் ஒரு விவசாயி தனது மனைவி மற்றும் 2 மகள்களை விஷம் கொடுத்துக் கொன்றுவிட்டுதற்கொலை செய்து கொண்டார். விஷம் குடிப்பதற்கு முன் தனது இரு உறவினர்களை அரிவாளால் வெட்டினார்.
பட்டுக்கோட்டை அருகே உள்ள வடகாடு கிராமத்தைச் சேர்ந்த சுந்தரேசன் (வயது 50) என்ற விவசாயி தனதுமனைவி சுந்தராநாயகி (வயது 45), மகள்கள் கலைவாணி (17), கலையரசி (15), மாமியார் ஆகியோருடன் வசித்துவந்தார்.
இந் நிலையில் நேற்றிரவு தனது மனைவி, மகள்களுக்கு குளிர்பானத்தில் விஷத்தைக் கலந்து கொடுத்தார்.இதையடுத்து மூவரும் மயங்கி விழுந்தனர். உடனே வீட்டைப் பூட்டிக் கொண்டு வெளியேறினார். சிறிது நேரத்தில்வீட்டுக்கு வந்த இவரது மாமியார் வீடு பூட்டியிருந்ததையடுத்து வீட்டுக்குள் எட்டிப் பார்த்தார்.
அப்போது தனது மகளும் பேத்திகளும் வாயில் நுரைதள்ளிக் கிடப்பதைக் கண்டு அண்டை வீட்டினருக்குத் தகவல்தந்தார். அவர்கள் வீட்டை உடைத்துப் பார்த்தபோது மூவரும் இறந்து கிடந்தனர். இதையடுத்து போலீசாருக்குத்தகவல் தரப்பட்டது.
அவர்கள் விரைந்து வந்து பிணங்களை மீட்டனர். அவரது வீட்டிலும் போலீசார் நிறுத்தப்பட்டனர். இந் நிலையில்இன்று காலை 5 மணிக்கு சுந்தரேசன் தனது வீட்டுக்கு வந்தார். அவரைப் பார்த்தவுடன் போலீசார் அவரைவிரட்டினர்.
இதையடுத்து தனது பையில் இருந்த அரிவாளை எடுத்து போலீசாரை அவர் மிரட்டினார். மிரட்டியபடியே ஓடினார்.ஓடிக் கொண்டே தன்னிடம் இருந்த விஷ பாட்டிலைத் திறந்து அதைக் குடித்தார். விஷத்தைக் குடித்துவிட்டு சிறிதுதூரம் ஓடிய அவர் மயங்கி விழுந்து இறந்தார்.
உறவினர்கள் மீது தாக்குதல்:
மனைவி, மகள்களைக் கொன்றுவிட்டு சுந்தரேசன் இரவில் எங்கே இருந்தார் என்று போலீசார் விசாரித்தபோதுமேலும் சில பரபரப்பான செய்திகள் கிடைத்தன. தனது சொந்த ஊரான தம்பிக்கோட்டைக்குச் சென்ற சுந்தரேச்அங்கு தனது உறவினர்கள் இருவரை அரிவாளால் வெட்டியுள்ளார்.
இதன் பின்னர் அங்கிருந்து தப்பி பட்டுக்கோட்டைக்குச் திரும்பியுள்ளார்.
இதற்கிடையே வீட்டில் போலீசார் சோதனையிட்டபோது ஒரு கடிதமும் ரூ. 5,000மும் கிடைத்தது. அதில் இந்தப்பணத்தை இறுதிச் சடங்குகளுக்காகப் பயன்படுத்திக் கொள்ளுமாறு எழுதி வைத்துள்ளார் சுந்தரேசன்.
இரு ஆண்டுகளுக்கு முன் தம்பிக்கோட்டையில் இருந்த தனது நிலத்தை விற்றுவிட்டுத் தான் குடும்பத்தோடுபட்டுக்கோட்டைக்கு வந்துள்ளார் சுந்தரேசன். இவரை ஏமாற்றி இவரது உறவினர்கள் நிலத்தை அபகரித்ததாகத்தெரிகிறது. மேலும் வேலை ஏதும் இன்றி கஷ்டப்பட்டு குடும்பம் நடத்தியுள்ளார்.
இதனால் வெறுப்புடன் வாழ்ந்த அவர் குடும்பத்தையும் அழித்துவிட்டு, ஏமாற்றியதாகக் கூறப்படும்உறவினர்களையும் தாக்கிவிட்டு தன்னையும் மாய்த்துக் கொண்டுள்ளார் என்று கூறப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications