சென்னை, ஈரோடு, சேலத்தில் தீ விபத்துகள்: வீடுகள், கடைகள் எரிந்தன- 15 பசு மாடுகள் சாவு
சென்னை:
சென்னை கீழ்பாக்கத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 150க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து சாம்லாயின. 15 பசு மாடுகள்தீயில் கருகி இறந்தன.
கீழ்பாக்கம் வாட்டர் டேங்க் சாலையில் இந்த குடிசை வீடுகள் உள்ளன. இன்று அதிகாலை 3 மணியளவில் ஒருவீட்டில் ஏற்பட்ட தீ மளமளவென பிற வீடுகளுக்கும் பரவியது. இதையடுத்து வீடுகளில் இருந்தவர்கள்அலறியடித்துக் கொண்டு வெளியேறினர்.
இந்தத் தீ மாட்டுக் கொட்டகைக்கும் பரவியது. இதில் 14 பசு மாடுகள் தீயில் கருகி இறந்தன. மேலும் 6 மாடுகள்படுகாயமடைந்தன. அவை கால்நடை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளன.
150 குடிசை வீடுகளும் தீயில் நாசமாயின. சில வீடுகளில் இருந்த கேஸ் சிலிண்டெர்களும் வெடித்துச் சிதறின.இதனால் தீயை அணைக்க தீயணைப்புப் படையினர் நெடுநேரம் போராட வேண்டி இருந்தது.
150 வீடுகளிலும் இருந்த டிவிக்கள், பாத்திரங்கள், உடைகள் ஆகியவை எரிந்து போயின. இந்த விபத்தினால்சுமார் லட்சம் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. நல்லவேளையாக உயிர்ச் சேதம் ஏதும்ஏற்படவில்லை.
ஈரோடில் தீ : ரூ. 1 கோடி நாசம்
அதே போல ஈரோட்டில் துணிகளுக்கு சாயம் போடும் நிறுவனத்தில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் ரூ. 1 கோடி அளவுக்கு சேதம்ஏற்பட்டது.
ஈரோடு மாவட்டம் சூரம்பட்டி வலசு என்ற இடத்தில் ஏராளமான சாயப்பட்டறைகள் உள்ளன. ஈரோட்டில் தயாராகும்துணிகளுக்கு சாயம் போடுவது மற்றும் துணிகளில் அச்சு பதிப்பது உள்ளிட்ட பணிகள் இங்குதான் செய்யப்படுவது வழக்கம்.
சங்குநகர் என்ற இடத்தில், ஒரு குடிசை வீட்டில் தீப்பிடித்துக் கொண்டது.
கொளுந்து விட்டு எரிந்த தீ வேகமாக அடுத்தடுத்து இருந்த வீடுகள், சாயப்பட்டறைகளுக்கும் பரவியது. அவை அனைத்தும்தீயில் கருகின. சாயம் பூசுவதற்காக வந்திருந்த சேலைகள் உள்ளிட்ட துணிகள் கருகின.
தீயணைப்புப் படையினர் மிகவும் தாமதமாக வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டதால் பெரும் தீவிபத்தாக அது மாறிவிட்டது. ரூ. 1 கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
சேலத்தில்...
இதே போல சேலம் அயோத்தியாபட்டணம் முனியப்பன் கோயில் அருகே ஹோட்டலில் சமையல்கேஸ் சிலிண்டர் வெடித்துச் சிதறியதில் ஹோட்டல், அரிசி மண்டிகள், காய்கறிக் கடைகள்,ஹோட்டல்கள், பெட்டிக் கடைகள் ஆகியவையும் தீயில் எரிந்து நாசமாயின.
இதில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள அரிசி மூட்டைகள், தக்காளி உள்ளிட்ட காய்கறிகள், மூன்றுஹோட்டல்கள், பெட்டி கடை பொருட்கள் தீயில் எரிந்து சாம்பலாகின.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications