வீரப்பன் பண விவகாரம்: ஜெவுக்கு தினகர் ஆதரவு

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

நடிகர் ராஜ்குமாரை மீட்க வீரப்பனுக்கு பணம் கைமாறியது குறித்து தமிழக அரசு நடத்தி வரும்விசாரணைகளுக்கு முட்டுக் கட்டை போட கர்நாடக அரசு முயல்வதாக அம் மாநில முன்னாள் டிஜிபிதினகர் குற்றம் சாட்டியுள்ளார்.

வீரப்பனுக்குப் பணம் கைமாறியதாக தினகர் எழுதிய புத்தகத்தின் அடிப்படையில் விசாரணைக்கேமுதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் நக்கீரன் கோபால், மற்றும்நக்கீரன் பத்திரிக்கை நிருபர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. இதில் கருணாநிதியும், கர்நாடகமுதல்வர் கிருஷ்ணாவும் கூட விசாரிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

ஆனால், பணம் ஏதும் தரப்படவில்லை என கிருஷ்ணாவும், ராஜ்குமார் கடத்தலின்போது முதல்வராகஇருந்த கருணாநிதியும் கூறியுள்ளன.

இந் நிலையில் வீரப்பன் விவகாரத்தில் உண்மையைச் சொன்னதற்காக கர்நாடக அரசு தன்னைப்பழிவாங்க முயல்வதாக தினகர் குற்றம் சாட்டியுள்ளார்.

அவர் கூறியதாவது: தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பி. மற்றும் கூடுதல் எஸ்.பி. ஆகியோர் இந்தவீரப்பன் விவகாரம் குறித்து என்னிடமும் விவாதித்துவிட்டுச் சென்றனர். இந்தப் பணம்கைமாறியதில் நேரடித் தொடர்புடைய கிருஷ்ணாவின் மருமகன் சித்தார்த்தா என்னை பொய்யாகபல வழக்குகளில் மாட்டிவிட முயற்சி செய்து வருகிறார்.

மேலும் தமிழக அரசு நடத்தி வரும் விசாரணைகளைக் குலைக்கவும் கர்நாடகம் முயல்கிறது என்றார்தினகர்.

தினகர் இப்போது கர்நாடகத்தில் பெரும் சிக்கலில் மாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. தனது மாஜிமனைவி ஷீலாவும் தினகரும் சேர்ந்து தன்னைத் தாக்கியதாக கர்நாடக மாநில முன்னாள் டிஜிபி ஜார்ஜ்குற்றம் சாட்டியுள்ளார்.

தினகருக்கும் ஷீலாவுக்கும் ஏதோ தொடர்பு இருப்பதாகவும் தினகர் தன்னைக் கொல்லமுயல்வதாகவும் ஜார்ஜ் கூறியுள்ளார். இந்த வழக்கில் தினகரைக் கைது செய்ய கர்நாடக போலீசார்திட்டமிட்டுள்ளனர். இந் நிலையில் தான் வீரப்பன் விவகாரத்தை மீண்டும் கையில் எடுத்துள்ளார்தினகர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+