இலங்கையில் தவித்த 13 தமிழக மீனவர்கள்: இந்திய தூதரகம் உதவ மறுப்பு

Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்:

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 13 மண்டபம் மீனவர்கள் விடுவிக்கப்பட்டு ஊர் வந்து சேர்ந்தனர்.

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 4 மண்டபம் பகுதி மீனவர்கள் கடந்த மே 5ம் தேதி அந் நாட்டுதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் மண்டபம் திரும்பிக் கொண்டிருந்தபோது, கடல் கொந்தளிப்பால்மீண்டும் இலங்கை கடல் பகுதிக்குள் சென்று விட்டனர்.இதைத் தொடர்ந்து மறுபடியும் கைது செய்யப்பட்டனர்.

இந் நிலையில் இவர்களைத் தேடி தங்கச்சி மடத்தைச் சேர்ந்த மீனவர்கள் 9 பேர் கடலுக்குள் சென்றனர்.அவர்களையும் இலங்கை கடற்படை கைது செய்து சிறையில் அடைத்தது.

இவர்களது நிலையைப் பரிசீலித்த நீதிபதி அனைவரையும் விடுதலை செய்ய உத்தரவிட்டார். அவர்களை கப்பல்மூலம் கச்சத்தீவுக்குக் கொண்டு சென்று விடுமாறும் உத்தரவு பிறப்பித்தார்.

இதைத் தொடர்ந்து கச்சத்தீவு அருகே உள்ளசர்வதேச எல்லையில் 13 மீனவர்களையும் இலங்கை கடற்படைவிடுவித்தது. இதையடுத்து அவர்களை தமிழக மீனவர்கள் அங்கிருந்து ராமேஸ்வரத்துக்கு அழைத்து வந்தனர்.

தங்களது விடுதலைக்கு இந்திய தூதரக அதிகாரிகள் கொஞ்சம் கூட தங்களுக்கு உதவவில்லை என்று மீனவர்கள்குற்றம் சாட்டியுள்ளனர். எங்களது நிலையைப் பார்த்து இலங்கை நீதிபதியே மனம் இறங்கி விடுவித்தார் என்றும்மீனவர்கள் வருத்தத்துடன் குறிப்பிட்டனர்.

தங்களை மீட்காவிட்டால், தற்கொலை செய்து கொண்டு விடுவோம் என்று கூறியும் கூட இந்திய தூதரகஅதிகாரிகள் தங்களை மீட்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கோபத்துடன் அவர்கள் கூறினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+