வாரிசு அடிப்படையில் பதவிக்கு வரவில்லை: ஸ்டாலின்
சென்னை:
கருணாநிதியின் வாரிசு என்பதால் எனக்கு துணைப் பொதுச் செயலாளர் பதவிகொடுக்கப்படவில்லை என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
கட்சியில் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் இருக்க வேண்டும், அவர்களை ஊக்கப்படுத்தவேண்டும் என்பதற்காகத்தான் மிகப் பெரிய பொறுப்பை கட்சி மேலிடம் வழங்கியுள்ளது.
அதை நான் செம்மையாக நிறைவேற்றுவேன். நான் மட்டும் துணைப்பொதுச் செயலாளர் இல்லை,என்னுடன் மேலும் 2 பேரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 3 பேரும் சேர்ந்து கட்சி வளர்ச்சிக்காகபாடுபடுவோம்.
எனக்கும் அண்ணன் அழகிரிக்கும் எந்தவிதமான சொத்துப் பிரச்சனையோ, தனிப்பட்ட விரோதமோஇல்லை. கட்சியில் வளர்ச்சிக்காக, கட்சி நலனுக்காகத் தான் மோதிக் கொண்டோம். அதையும் கூடவிட்டுவிட்டு இப்போது இணைந்து செயலாற்றி வருகிறோம் என்றார்.
அமைதியாக முடிந்த பொது குழு:
எந்தவித சலசலப்பும் இல்லாமல், மிகவும் அமைதியாகவும், கட்டுக்கோப்புடனும் திமுகபொதுக்குழுக் கூட்டம் நடந்து முடிந்துள்ளது.
12-வது உட்கட்சித் தேர்தல் முடிந்து திமுகவின் முதல் பொதுக்குழுக் கூட்டம் நேற்று சென்னையில்நடந்தது.
தா.கிருட்டிணன் படுகொலை, சிறையில் அழகிரி, ஸ்டாலினுக்கு பதவி கிடைக்குமா, கிடைக்காதாஎன்ற பரபரப்பான சூழ்நிலையில் கூட்டம் நடந்ததால், இறுக்கமான சூழ்நிலை நிலவும் என்றுஎதிர்பார்க்கப்பட்டது.
மேலும் தா.கி. விவகாரம் தொடர்பாக தென் மாவட்ட திமுகவினரைத் தூண்டிவிட்டு கூட்டத்தில்சலசலப்பை ஏற்படுத்தவும் ஆளுங்கட்சி தரப்பில் முயற்சி நடந்தது. இதனால் ஏதாவது பரபரப்பானசம்பவம் நடக்கலாம் என்ற எதிர்பார்ப்புடன் கூட்டம் தொடங்கியது.
ஆனால், எந்தவித சலசலப்பும் இல்லாமல், திருவிழா களையுடன் பொதுக் குழுக் கூட்டம் நடந்தது.திமுகவுக்கே உரிய கட்டுக்கோப்பை பார்க்க முடிந்தது.


