சிறையில் வைகோவுடன் தாயார் சந்திப்பு
வேலூர்:
பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள மதிமுக தலைவர்வைகோவை அவரது தாயார் மாரியம்மாள் சந்தித்தார்.
எனது மகன் சிறையில் நன்றாக உள்ளான். அவன் சிறையில் இருப்பது எனக்கு வருத்தம்அளிக்கவில்லை. காரணம், அவன் எந்தத் தவறும் செய்துவிட்டு சிறைக்குச் செல்லவில்லை. அதனால்எப்போதும் அவன் என்னுடன் இருக்கும் உணர்வே உள்ளது.
ஊருக்கு உழைத்ததைத் தவிர அவன் என்ன தப்பு செய்தான் தண்டனை தருவதற்கு?. அவனுக்குஎத்தனை நாள் கிரகம் இருக்கோ அத்தனை நாள் அவன் உள்ளே இருக்க வேண்டியுள்ளது. எல்லாம்அவனுக்கு நல்லதே நடக்கும் என்றார் மாரியம்மாள்.
ஆனால், துரை வைய்யாபுரி முகத்தில் புன்னகையுடன் நிருபர்களின் கேள்விகளைத்தவிர்த்துவிட்டார்.
மாறனை சந்திக்கச் சென்ற கண்ணப்பன்:
அமெரிக்காவில் சிகிச்சை பெறும் முரசொலி மாறனின் குடும்பத்தினரை மதிமுக அமைச்சர்மு.கண்ணப்பன் சந்தித்துவிட்டுத் திரும்பியுள்ளார்.
வேலூர் மத்திய சிறையில் வைகோவை சந்திக்க வந்த கண்ணப்பன் நிருபர்களிடம் பேசுகையில்,அமெரிக்காவில் ஹூஸ்டன் மருத்துவமனையில் மாறன் சிகிச்சை பெற்று வரும் முரசொலிமாறனைச் சந்திக்கச் சென்றிருந்தேன்.
ஆனால், அவரை குடும்பத்தினர் மற்றும் டாக்டர்கள் மட்டுமே பார்க்க முடியும் என்று கூறிவிட்டனர்.இதனால் நான் அவரை நேரில் சந்திக்கவில்லை. அங்கிருந்து அவரது குடும்பத்தினரைச் சந்தித்துஆறுதல் கூறினேன். அவருக்கு டயாலிசிஸ் செய்யப்படுகிறது. அவரை காப்பாற்ற முடியும் என்றநம்பிக்கையுடன் டாக்டர்கள் உள்ளனர் என்றார்.
ஊழலில் செஞ்சிக்கு தொடர்பு: சிபிஐ
இதற்கிடையே வருமானவரித்துறை அதிகாரிகள் பணி மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய விவகாரத்தில்மத்திய நிதித்துறை இணையமைச்சராக இருந்த மதிமுகவைச் சேர்ந்த செஞ்சி ராமச்சந்திரனுக்கும்தொடர்பு உள்ளதாக சி.பி.ஐ. கூறியுள்ளது.
இந்த வழக்கில் கைதான உதவியாளர் பெருமாள்சாமியின் போலீஸ் காவலை நீடிப்பதற்காக அவரைடெல்லியில் உள்ள சி.பி.ஐ. நீதிமன்றத்தில் அதிகாரிகள் ஆஜர்படுத்தினர்.
இந்த வழக்கில் முன்னாள் மந்திரி செஞ்சி ராமச்சந்திரனுக்கும் தொடர்பு இருப்பது மறுப்பதற்குஇல்லை. நிதித்துறை அமைச்சகத்தின் இரு மூத்த அதிகாரிகளுக்கு இந்த லஞ்ச விவகாரத்தில் உள்ளபங்கு பற்றிய விசாரணை திரட்டி வருகிறோம் என சி.பி.ஐ. தரப்பு வக்கீல் ஏ.எஸ்.சீமா நீதிமன்றத்தில்கூறினார்.
விசாரணைக்காக செஞ்சி ராமச்சந்திரன் அழைக்கப்படுவார் என்றும் அவர் சென்னார்.


Click it and Unblock the Notifications
