கேன்சரால் பாதிக்கப்பட்ட தாயை காண "லீவ்" கிடைக்காததால் போலீஸ்காரர் தற்கொலை
பாண்டிச்சேரி:
புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள தனது தாயைப் பார்க்க செல்ல விடுப்பு கிடைக்காததால்பயிற்சியில் இருந்த போலீஸ்காரர் மரத்தில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
புதுவை கோரிமேடு பகுதியில் உள்ள காவலர் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி எடுத்து வந்தார்.
இவரது தாயார் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இந் நிலையில், சில நாட்களுக்கு முன்தாயாரின் உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டிருப்பதாக தந்தி வந்தது.
இதையடுத்து தனது தாயைக் காண செல்ல வேண்டும் என்று கூறி விடுப்பு கேட்டு விண்ணப்பித்தார்குமார்.
ஆனால், பயிற்சிக் கல்லூரியின் பொறுப்பாளரான எஸ்.பி. விடுப்பில் சென்றிருந்ததால் குமாருக்குஉடனடியாக விடுப்பு கிடைக்கவில்லை. உயர்அதிகாரிகளுக்கு சுபேஷ் குமாரின் நிலைவிளக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து தாயாருக்கு உண்மையிலேயே உடல் நிலை சரியில்லையா என்று விசாரித்துசுபேஷ் குமாருக்கு விடுப்பு அளிக்குமாறு உயர் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதிலேயே பல நாட்கள் கழிந்துவிட்டன. விடுப்பு கிடைத்தபாடில்லை.
இந் நிலையில் நேற்று காலை முதல் சுபேஷ் குமாரைக் காணவில்லை. அவரை கல்லூரி முழுவதும்தேடிப் பார்த்தனர். அப்போது ஒரு மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக அவர்கண்டுபிடிக்கப்பட்டார்.
தனது சாவுக்கு, விடுப்பு கிடைக்காததே காரணம் என்று அவர் கடிதம் எழுதி வைத்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications