வாஜ்பாய் நினைத்திருந்தால் வைகோவை மீட்டிருக்கலாம்: சோம்நாத் சாட்டர்ஜி
சென்னை:
ஜெயலலிதாவின் 15 எம்.பிக்களின் மறைமுக ஆதரவு இருப்பதால் தான் வைகோவை பொடா சட்டத்தில் சிறையில்வைத்திருக்க பா.ஜ.க. அனுமதித்துள்ளது. பிரதமர் வாஜ்பாயும் துணைப் பிரதமர் அத்வானியும் ஜெயலலிதாவுடன்மறைமுக கூட்டு வைத்துள்ளனர் என ன்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான சோம்நாத் சாட்டர்ஜி குற்றம்சாட்டினார்.
வைகோவைத் தொடர்ந்து ராஷ்ரீய லோக் தள் கட்சியின் தலைவர் அஜீத் சிங்கையும் பா.ஜ.க.கேவப்படுத்தியுள்ளது. பதவிக்காக எதையும் செய்பவர்கள் என்பதை பா.ஜ.க. தலைவர்கள் நிரூபித்துவிட்டனர்.
இதனால் தான் வைகோ ஆதரவை வாபஸ் பெற்றாலும் அதைச் சமாளிக்க ஜெயலலிதாவுடன் ரகசிய கூட்டுவைத்துள்ளார்கள். பிரதமர் வாஜ்பாய் நினைத்திருந்தால் வைகோவை விடுதலை செய்திருக்கலாம்.
பொடாவை தவறாகப் பயன்படுத்தும் மாநில அரசுகள் மீது நடவடிக்கை எடுக்காமல் மத்திய அரசுமெத்தனம் காட்டி வருகிறது. பொடா சட்டம் வந்த பிறகு நாட்டில் தீவிரவாதம் குறைந்து விட்டதுஎன்று யாரவது கூற முடியுமா?.
இது தவிர வாஜ்பாய்க்கும் அத்வானிக்கும் இடையே பா.ஜ.கவுக்குள் தனியே பெரும் சண்டையே நடந்து வருகிறது.தனது ஆதரவாளரான வெங்கைய்யா நாயுடு மூலம் வாஜ்பாயை முடக்க முயல்கிறார் அத்வானி.
இதனால் தான் அடுத்த தேர்தலை அத்வானி தலைமையிலேயே சந்தித்துக் கொள்ளுங்கள் என்று கூறி தேசியஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளார் வாஜ்பாய். ஆனால், அத்வானியைமுன்னிருத்தி போட்டியிட பா.ஜ.க. தவிர மற்ற எந்தக் கூட்டணிக் கட்சியும் தயாராக இல்லை.
இதை அத்வானி கோஷ்டிக்கு உணரச் செய்து கட்சியில் தனது செல்வாக்கை சரி செய்து கொள்ளவே வாஜ்பாய்இவ்வாறு பேசியுள்ளார். இதையடுத்து கூடிய அவசர அமைச்சரவைக் கூட்டத்தில் வாஜ்பாய்க்கு அனைத்துஅமைச்சர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இப்போது வாஜ்பாய்க்காக தான் வாதாடுவது போல வெங்கைய்யா நாயுடு நடிக்க வேண்டிய கட்டாயமும்ஏற்பட்டுள்ளது.
பா.ஜ.கவிடம் இருந்து அனைத்து மதசார்பற்ற கட்சிகளும் விலகிவிடுவது தான் நாட்டின் எதிர்காலத்துக்கு நல்லது.பா.ஜ.கவுடன் ரகசிய கூட்டணி வைத்துள்ள அதிமுகவும் அதை முறித்துக் கொள்ள வேண்டும்.
தேசிய அரசியலில் தமிழகத்துக்கு மிக முக்கிய இடம் உண்டு. ஆனால், அதிமுகவும் திமுகவும் ஒன்றுடன் ஒன்றுமோதிக் கொண்டு தமிழகத்தின் தேசிய முக்கியத்துவத்தை பின் தள்ளி வருவது வேதனை தருகிறது என்றார்சோம்நாத்.
பொடா தவறு.. உமர் அப்துல்லா
பொடா சட்டத்தின் நோக்கம் நறைவேறவில்லை. பல்வேறு பகுதிகளிலும் அது தவறாகவேபயன்படுத்தப்படுகிறது. பொடா சட்டத்தை அறிமுகப்படுத்தியதால் நாங்கள் காஷ்மீரில்படாதபாடுபட்டு விட்டோம் என்று தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும், முன்னாள் மத்தியஅமைச்சருமான உமர் அப்துல்லா கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், பொடா சட்டமாவதற்கு முன்பிருந்தே அதைஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் எங்களது ஆட்சி அறிமுகப்படுத்தியது.
இதனால் நங்கள் மக்கள் செல்வாக்கை இழந்தோம். படாத பாடு பட்டு விட்டோம். இதனால்தான்தற்போதுள்ள முப்தி முகம்மது சயீத் தலைமையிலான அரசு பொடாவை பயன்படுத்த மாட்டோம்என்று கூறியுள்ளது.
அதுதான் அவர்களுக்கு நல்லது. இன்று, நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் பொடா சட்டம்தவறாகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது. அரசியல், மதரீதியான காரணங்களுக்காக அதுபயன்படுத்தப்படுகிறது.
உத்தரப் பிரதேசத்தில் தனது அரசியல் எதிரிகளைப் பழி வாங்க முதல்வர் மாயாவதி பொடாவைபயன்படுத்தி வருகிறார். தமிழகத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பொடாவில்கைதானதற்கும் அரசியலே காரணம் என்றார்.
-
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
இறுதிச் சடங்குகளை மேற்கொண்ட அஜித் குமாரின் சகோதரர்.. மோகினி மணி உடல் பெசன்ட் நகர் மயானத்தில் தகனம்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications