சிகிச்சைக்கு வந்த சிறுமியிடம் தவறாக நடந்த டாக்டருக்கு அடி, உதை
சென்னை:
சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுமியிடம் செக்ஸ் லீலைகள்காட்டிய டாக்டருக்கு அடி, உதை விழுந்தது. பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.
நேற்று வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது மாடிப் படியில் இருந்து விழுந்தாள். இதில் இச்சிறுமியின் கால் எலும்பு முறிந்தது. இதையடுத்து சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனையில்சேர்க்கப்பட்டாள்.
அவளுக்கு டாக்டர் ரவிசங்கர் என்பவர் சிகிச்சை அளித்தார். அப்போது கீர்த்தனாவிடம் அவர்தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்தசிறுமி கீர்த்தனா, டாக்டரின் செய்கை குறித்து பாட்டியிடம் அழுதபடியேதெரிவித்தாள். இதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் உறவினர்களும், மருத்துவமனைக்கு வந்தநோயாளிகளும் டாக்டரை அடித்து, உதைத்தனர்.
இதில் டாக்டர் ரவிசங்கரின் மண்டை உடைந்தது. இதனால் மருத்துவமனையில் பெரும் பரபரப்புஉண்டானது. சம்பவம் குறித்து வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்துக்குத் தகவல்தெரிவிக்கப்பட்டது.
விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் செந்தில்குமரன் டாக்டர் ரவிசங்கரை கைது செய்தார்.
அவர் காயமடைந்திருப்பதால் மருத்துவமனையிலேயே அவர் சிறை வைக்கப்பட்டு சிகிச்சைஅளிக்கப்பட்டு வருகிறது.
டாக்டர் ரவிசங்கர், எலும்பு முறிவு மருத்துவத்தில் உயர் கல்வி பயின்று வருகிறார். இந்தக்கல்வியின் ஒரு பகுதியாக ஸ்டான்லி மருத்துவனையில் பயிற்சி எடுத்து வந்தார்.
சம்பவம் குறித்து விசாரணை நடத்த 2 பேராசிரியர்கள் கொண்ட குழுவையும் மருத்துவமனை டீன்நியமித்துள்ளார். அவர்கள் அறிக்கை கொடுத்த பின் டாக்டர் ரவிசங்கர் மீது இலாகப்பூர்வமானநடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications