ஜெ. கேட்டது கிடைத்தது: தமிழகத்துக்கு ரூ. 7,000 கோடி ஒதுக்கீடு

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

Jayalalithaa with Panth
திட்டக் குழுத் துணைத் தலைவர் கே.சி. பந்துடன் முதல்வர் ஜெயலலிதா
2003 -2004ம் ஆண்டுடில் தமிழகத்துக்கான திட்ட ஒதுக்கீடு ரூ. 7,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதுகடந்த ஆண்டில் ஒதுக்கப்பட்டதை விட 18 சதவீதம் அதிகமாகும்.

கடந்த ஆண்டு தமிழகத்திற்கு ரூ.5,750 கோடி தான நிதி வழங்கப்பட்டது.

தமிழகத்துக்கு திட்ட ஒதுக்கீடு செய்வது குறித்து இன்று டெல்லியில் திட்டக் கமிஷன் கூட்டம்நடந்தது. இதில் மத்தியத் திட்டக் குழுத் துணைத் தலைவர் கே.சி. பந்த், முதல்வர் ஜெயலலிதா மற்றும்அதிகாரிகள் கலந்து கொண்டார்.

அப்போது தமிழகத்திற்கு இந்த ஆண்டு ரூ. 7,000 கோடியை ஒதுக்க வேண்டும் என்று ஜெயலலிதாகோரிக்கை விடுத்தார்.

அப்போது தமிழகத்தின் நிதிப் பராமரிப்பையும், மின்துறையில் தமிழகம் செய்துள்ள சீர்திருத்தங்களையும் பந்த்வெகுவாகப் பாராட்டினார். தமிழகம் கோரியபடி ரூ. 7,000 கோடியை ஒதுக்குவதாகவும் அறிவித்தார். மேலும்தமிழகத்தின் இப்போதைய நிதிச் சிக்கல்கள் அடுத்த ஆண்டில் முழுமையாகத் தீர்ந்துவிடும் என்றும் அவர்நம்பிக்கை தெரிவித்தார்.

கூட்டத்துக்குப் பின் வெளியே வந்த ஜெயலலிதா நிருபர்களிடம் பேசுகையில், தமிழகத்துக்கு ரூ. 7,000 கோடிஒதுக்கப்பட்டுள்ளது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. நாங்கள் ரூ. 7,000.13 கோடியைக் கேட்டோம், கேட்டதொகையைத் தந்துவிட்டனர் என்றனர்.

jayalaithaa in Delhi
விமான நிலையத்தில் காரில் செல்லும் ஜெயலலிதாவை
வரிசையில் நின்று கும்பிட்ட அமைச்சர்கள்

இது தவிர தமிழகத்தின் நிதி நெருக்கடியைப் போக்க சிறப்பு நிதியாக ரூ. 1,000 கோடி வழங்கலாம்என மத்திய நிதித்துறைச் செயலாளர் நாராயணன், நிதியமைச்சர் ஜஸ்வந்த் சிங்குக்கு பரிந்துரைசெய்துள்ளதாகக் கூறப்படுகிறது.


இது குறித்தும் ஜஸ்வந்த் சிங்குடன் இன்று ஜெயலலிதா ஆலோசனை நடத்துவார் என்று தெரிகிறது.
திட்டக் குழுக் கூட்டத்தில் பங்கேற்க நேற்று மாலை தனி விமானத்தில் நிதியமைச்சர் பொன்னையன்,தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷ், நிதித்துறை செயலாளர் நாராயணன் உள்ளிட்ட 7அதிகாரிகளுடன் ஜெயலலிதா டெல்லி வந்தார்.
சென்னை விமான நிலையத்தில் ஜெயலலிதாவை வழி அனுப்பி வைக்க அமைச்சர்களும்எம்.எல்.ஏக்களும் வரிசையில் காத்திருந்தனர். வழக்கமாக இவர்களிடம் பூங்கொத்து வாங்கிக்கொண்டு செல்லும் ஜெயலலிதா அதைத் தவிர்த்துவிட்டார்.
Jayalalithaa in Delhi

திட்டக் குழுக் கூட்டத்தில் பந்த், ஜெயலலிதா மற்றும் அதிகாரிகள்

இதனால் ஜெயலலிதாவின் காருக்கு இவர்கள் வரிசையின் நின்று கும்பிடுபோட்டு அவரைவழியனுப்பி வைத்தனர். இன்று மாலையே ஜெயலலிதா சென்னை திரும்புவார்.
Mail this to a friend  Post your feedback  Print this page 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+