வருமுன் காத்திடு உடன்பிறப்பே: நிதி திரட்ட திமுகவினருக்கு கருணாநிதி கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கட்சிக்கு நிதி திரட்ட களத்தில் இறங்குமாறு கட்சியினருக்கு மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார் திமுகதலைவர் கருணாநிதி.

தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

துணைப் பொதுச் சொயலாளர் சற்குண பாண்டியன் தலைமையில் வண்ணை தேவகி, நூர்ஜகான்பேகம், காரல் மார்க்ஸ், காஞ்சனா கமலநாதன், சங்கரி நாராயணன், சுலக்ஷனா, ராஜம் ஜான்ஆகியோரைக் கொண்ட தாற்காலிக மகளில் அணி அமைக்கப்பட்டுள்ளது.

பின்னர் நிலையான மாநில மகளிர் அணி தலைமை கழகத்தினால் அமைக்கப்படும்.

மாவட்ட மாநாடுகள் நடத்த பல மாவட்டச் செயலாளர்கள் முன் வந்துள்ளனர். இந்த மாநாடுகள்நடத்திட முனைவோர் தலைவரையும், பொதுச் செயலாளரையும் கலந்து பேசி முடிவெடுக்கவேண்டும்.

பெரும்பாலும் குறைவான இடைவெளியில் நாம் நாடாளுமன்றத் தேர்தலையும் சட்டமன்றப்பொதுத் தேர்தலையும் சந்திப்பதற்கும் வெற்றி பெற்றிடுவதற்கும் முக்கிய முதலீடாகபெரும்பான்மையான வக்காளப் பெருமக்கள் நமது அணியில் நாளும் பெருகி வருகிறார்கள்எனினும்,

இரண்டு பெரிய தேர்தல் களங்களில் ஏற்படும் நியாமான செலவினங்களுக்குத் தேவையானபணத்தைத் திரட்டுவது என்பது வருமுன் காத்திடும் வகையான செயலன்றோ.

போட்டி போட்டுக்கொண்டு நிதி வழங்குவதிலும் மாவட்ட மாநாடுகள் ஒன்றையொன்றுமிஞ்சக்கூடிய வகையில் நடத்துவதிலும் வசூலையும் அவ்வண்ணமே காட்டுவதிலும் நமது செயல்மறவர்களாம் உடன்பிறப்புகள் ஒருவருக்கொருவர் சளைத்தவர்களல்லர் என்பது எனக்குத்தெரியாதா என்ன?.

தெரிந்திருப்பினும் திரும்பவும் ஒரு முறை அவர்களின் திறனை அறிவதில் எனக்கு அவா இருப்பதில்தவறு இருக்க முடியாதே. இவ்வாறு கருணாநிதி தனது அறிக்கையில் கூறியிருக்கிறார்.

இதன்மூலம் கட்சிக்கு நிதி திரட்ட களத்தில் இறங்குமாறு கட்சியினருக்கு மீண்டும் அழைப்புவிடுத்துள்ளார் கருணாநிதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+