தமிழகத்தில் இனி கூட்டணி ஆட்சி தான்: ராமதாஸ்

Subscribe to Oneindia Tamil

திண்டிவனம்:

தமிழகத்திலும் இனி கூட்டணி ஆட்சி தான் அமையும் என பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ்கூறியுள்ளார்.

திண்டிவனத்தையடுத்து தைலாபுரத்தில் உள்ள தனது தோட்டத்தில் ராமதாஸ் நிருபர்களைச் சந்தித்தார்.அவர் கூறியதாவது:

தனிக்கட்சி ஆட்சி சகாப்தம் முடிந்தது. இனி மத்தியிலும் சரி, மாநிலத்திலும் சரி, தனிக்கட்சி ஆட்சிஇருக்காது. இனி அமைய போவது கூட்டணி ஆட்சி தான். 20 கட்சிகள் ஆதரவோடு வாஜ்பாய்மத்தியில் ஆட்சி நடத்தி வருகிறார். கூட்டணி கட்சிகளால் நிரந்தர ஆட்சியை தர முடியும் என்று அவர்நிரூபித்து இருக்கிறார்.

கூட்டணி ஆட்சியில் செயல் திட்டங்களை முன் கூட்டியே அறிவிக்க முடிகிறது. கூட்டு முயற்சியில்முடிவுகள் எடுக்கப்படும் பாாேது தவறுகள் குறைந்து விடுகின்றன. மேற்கு வங்கத்தில் 25 ஆண்டுகள்எந்த பிசிறும் இல்லாமல் கரமாக சி.பி.எம் தலைமையில் கூட்டணி ஆட்சி நடக்கிறது.

இது தமிழ்நாட்டுக்கும் பொருந்தும். 2006 தேர்தலில் கூட்டணி ஆட்சிக்கான வாய்ப்பு பிரகாசமாகஇருக்கிறது. அது எத்தகைய கூட்டணி என்பது அப்போது தான் தெரியும்.

தனியார் கல்லூரியில் 50 சதவீத இடத்தை இட ஒதுக்கீடு முறையில் நிரப்ப வேண்டும் என்று அரசுஅறிவித்திருக்கிறது. ஆனால் இது தங்கள் சுதந்திரத்தில் தலையிடுவதாகும் என்று தனியார் கல்லூரிநிர்வாகம் ஒப்பாரி வைக்கின்றன. இது சமூக அநீதியாகும்.

அரசின் எச்சரிக்கையை மீறி சென்னை போன்ற பெரிய நகரங்களில் சில தனியார் பொறியியல்கல்லூரிகளில் லட்சக்கணக்கில் நன்கொடை கேட்டு கட்டாயப்படுத்தவதாக புகார்கள் வருகின்றன.இதை அரசு கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜூன். 12 மேட்டூர் அனை திறக்கும் நாள். ஆனால் அந்த அனை தற்போது வறண்டு கிடக்கிறது.டெல்லியில் கூடிய காவிரி கண்காணிப்பு குழு கூட்டத்தில் நல்ல முடிவு வரும் என்று எல்லோராலும்எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை இது ஏமாற்றமாக முடிந்திருக்கிறது.

பற்றாக்குறை காலத்தில் காவிரி நீரை பகிர்ந்து கொள்வது தொடர்பாக புதிய நெறிமுறைகளைவகுக்கும் தொழில் நுட்ப கமிட்டி அமைப்பது என முடிவு எடுத்திருக்கிறார்கள். காவிரி கண்காணிப்புகுழு என்பது சிறிய கமிட்டி தான்.

இத்தகைய சிறிய கமிட்டியில் முடிவு எடுக்க முடியாமல் 5 பேர் கமிட்டி என புதிதாக அமைத்திருப்பதுகாலத்தை வீணடிக்கும் முயற்சி. இந்த கமிட்டி நடைமுறைக்கு தமிழக அரசு ஒத்துக்கொண்டதுமிகப்பெரிய தவறு.

காவிரிப் பிரச்சனையில் ஜெயலலிதா முன்னேற்ற கழக அரசு படிப்படியாக உரிமைகளை விட்டுக்காாெடுத்து வருவது தெளிவாகிறது. கடந்த 200 ஆண்டுகளை பார்க்கும் போது கடந்த ஆண்டில்தான் கர்நாடகத்தில் இருந்து தமிழகத்துக்கு மிக குறைவாக தண்ணீர் வந்திருக்கிறது. பற்றாக்குறை எனநாடகமாடி கர்நாடக அரசு நமது உரிமையை மறுத்திருக்கிறது.

பற்றாக்குறை என்று சொல்லி நமக்கு 95 டி.எம்.சி தண்ணீர் மட்டும் தந்த கர்நாடகம், தனக்குஎவ்வளவு நீரை கடந்த ஆண்டு பயன்படுத்தியது என்ற விவரத்தைத் தரவில்லை. அதைக் கேட்டுப்பெற தமிழக அரசுக்கும் யோக்கியதை இல்லை.

சென்னை நகர குடிநீருக்கு சென்னையை சுற்றியுள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து குடிநீர்எடுத்து செல்வது அந்த மாவட்ட மக்களுக்கு செய்யும் மிகப்பெரிய துரோகம். ஆண்டுக்கு ஆண்டுநிலத்தடி நீர் கீழே போகும் நிலையும், செங்கல்பட்டு போன்ற மாவட்டத்தை பாலைவனமாக்கும்முயற்சியும் நடக்கிறது என்றார் ராமதாஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+