கிருஷ்ணசாமியின் அரசியல் கலாசாரம்: கமல் விமர்சனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

kamalசண்டியர் படத்தை பார்த்துவிட்டு விமர்சியுங்கள். அதன்பிறகு நட்பும், காதலும், பாசமும் நிறைந்தஎனது கதை சமூகத்திற்கு பாதகம் விளைக்குமெனில் அதைத் தடை செய்யுங்கள் என்று கமல்ஹாசன்கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

சண்டியர் என்ற படத்தின் தலைப்பை மட்டும் வைத்துக்கொண்டு இது சாதி பிரச்சனையை தூண்டும்என்று ஒரு அறிக்கையும், அதனால் படப்பிடிப்பை நிறுத்துவோம் என்ற இன்னொரு அறிக்கையும்,படப்பிடிப்பை நடத்த பாதுகாப்புத் தருவோம் என்று மற்றுமோர் அறிக்கையும் பல்வேறுஅமைப்புகளிலிருந்து வெளிவந்த வண்ணம் உள்ளன.

சினிமாவுக்காக அரிதாரம் பூசியுள்ள எனக்கு இந்த சாதி, அரசியல் சாயங்கள் தேவையற்றது.

அறிக்கைகள் வெளியிட்ட இரு தரப்பினரும் எனது சண்டியரை பார்க்க வேண்டும் என்றநோக்கத்தில் மட்டும் தான் நான் படமெடுக்கிறேன்.

வி.சி.டி., வரிகள் என்று சினிமா வர்த்தகம் சற்றே பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், எந்தமடையனும், ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை உயர்த்தி, மற்றொன்றை தாழ்த்திப் படமெடுக்கமாட்டான்.

அதுவும் என் மகளின் பிறப்பு பதிவு சான்றிதழில் சாதியையும், மதத்தையும் எழுத மறுத்த நான்,அந்தத் தப்பை கண்டிப்பாகச் செய்ய மாட்டேன்.

அரிவாள் கலாசாரத்தை போற்றும் எண்ணமும் எனக்கில்லை. ஒரு கலைப் படைப்பை அரசியல்,சாதிச் சாயம் பூசி உருக் குலைப்பது, என்னைப் பொறுத்தவரை ஒரு கலாசார துரோகம்.

தாழ்த்தப்பட்டவர், சத்திரியர், வைசியர், பார்ப்பனர் என்னைப் போன்ற சாதி மதமில்லாத சாதாரணர்,இன்னும் நான் சொல்ல மறந்த வர்ணங்களையும், மதங்களையும் சார்ந்த அனைவருமே கண்டுகளிக்கும் படமாக சண்டியரை அமைக்கவே நான் பாடுபடுவேன்.

சிந்தனை சுதந்திரத்தை பாதிப்புக்கு உள்ளாக்கும் இதுபோன்ற அரசியல் கலாசாரம், கிட்டத்தட்டஅரிவாள் கலாசாரத்திற்கு நிகரானதே.

அறிக்கைகள் விடும் இரு தரப்பினருக்கும் எனது கலையின், கலைஞர்களின் சார்பாக ஒருவேண்டுகோள்.....

படத்தை பார்த்துவிட்டு விமர்சியுங்கள். அதன்பிறகு நட்பும், காதலும், பாசமும் நிறைந்த எனது கதைசமூகத்திற்கு பாதகம் விளைக்குமெனில் அதைத் தடை செய்யுங்கள்.

படைப்பை பார்க்காமலே விமர்சிப்பது வினோதமான செயல். நிற்க.

இது பரிவுடன் எடுக்கப்பட வேண்டிய படம், பாதுகாப்புடன் எடுக்க வேண்டிய படமல்ல.

இருப்பினும் பாதுகாப்புக்கு போதிய ஆள் பலம் இல்லை என்ற தேனி எஸ்.பி. அமல்ராஜின்கூற்றையும் மனதில் கொண்டு தமிழக முதல்வரைச் சந்தித்து ஆலோசனை பெறவுள்ளேன்.

அதுவரை என்பால் அன்புள்ளவரும், என் வெளிவராத படைப்பை யூக விமர்சனம் செய்யும் என்சகோதர்களும் அறிக்கை பாணங்கள் வீசுவதை தயவாய் தவிருங்கள்.

இவ்வாறு நடிகர் கமலஹாசன் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+