சிங்கப்பூரில் தூக்கு தண்டனை: திருவாரூர் இளைஞரின் பெற்றோர் கருணை மனு

Subscribe to Oneindia Tamil

திருவாரூர்:

சிங்கப்பூரில் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட திருவாரூர் இளைஞருக்குதண்டனையை குறைக்கக் கோரி அந் நாட்டு அதிபர் எஸ்.ஆர். நாதன், குடியரசுத் தலைவர் அப்துல்கலாம், முதல்வர் ஜெயலலிதா ஆகியோருக்கு அவரது பெற்றோர் கருணை மனுக்களைஅனுப்பியுள்ளனர்.

திருவாரூரைச் சேர்ந்தவர் அருள் பிரகாஷ். இவர் 3 ஆண்டுகளுக்கு முன் சிங்கப்பூர் துறைமுகத்தில்வேலைக்குச் சேர்ந்தார். அவரும், திருச்சியைச் சேர்ந்த லெனின் செல்வநாயகம் என்பவரும் ஒரேஅறையில் தங்கியிருந்தனர்.

அப்போது அவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. ஒரு நாள் கடும் சண்டை நடந்தது. அப்போதுலெனினை கத்தியால் குத்திக் கொன்றுவிட்டார் அருள் பிரகாஷ்.

இதைத் தொடர்ந்து அருள் பிரகாஷ் கைது செய்யப்பட்டார். அவருக்கு சிங்கப்பூர் உயர்நீதிமன்றம்தூக்குத் தண்டனை விதித்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அருள் வழக்கு தாக்கல் செய்தார்.ஆனால், அங்கும் தூக்கு தண்டனை உறுதியானது.

இதையடுத்து அருள் பிரகாஷுக்கு கருணை காட்டக் கோரி அவரது தந்தை வைத்தியலிங்கம் மற்றும்தாயார் மனுக்களை அனுப்பியுள்ளனர்.

தூக்கு தண்டனையைக் குறைத்து ஆயுள் தண்டனையாக மாற்றுமாறு அவர்கள் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.

எங்களது கோரிக்கை ஏற்கப்படும் என்று கண்களில் நீருடன், அதே நேரத்தில் நம்பிக்கையுடன்கூறுகிறார் அருள் பிரகாஷின் தாயார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+