சென்னையில் ஆட்டோ கட்டணம் உயருகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை நகரில் ஆட்டோ கட்டணம் மேலும் உயரப் போகிறது.

ஆட்டோ கட்டண திருத்த ஆய்வுக் குழு, தமிழக அரசுக்கு இந்தப் பரிந்துகையைச் செய்துள்ளது.

சென்னையில் தற்போது குறைந்தபட்ச ஆட்டோக் கட்டணம் ரூ. 7 ஆக உள்ளது (ஆனால் எந்த ஆட்டோடிரைவரும் அந்தக் கட்டணத்தை வசூலித்ததாக வரலாறே இல்லை, குறைந்தது ரூ. 15தான் பறித்து வருகிறார்கள்).

இதை உயர்த்த வேண்டும் என்று பல மாதங்களாக ஆட்டோ டிரைவர்கள் வற்புறுத்தி வருகிறார்கள். இதைத்தொடர்ந்து உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, ஆட்டோ கட்டணத்தை சீரமைப்பது தொடர்பாக ஆராய உயர் மட்டக் குழுஒன்றை தமிழக அரசு அமைத்தது.

இந்தக் குழு தற்போது அரசிடம் தனது பரிந்துரையை சமர்ப்பித்துள்ளது. அதன்படி குறைந்தபட்ச ஆட்டோக்கட்டணமாக ரூ. 8.50ம், அதற்குப் பிறகு ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ. 4.25 எனவும் கட்டணத்தைநிர்ணயிக்கலாம் என்று இக்குழு கூறியுள்ளது.

ஆனால், இந்த உயர்வு போதுமானதாக இல்லை என்று ஆட்டோ டிரைவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.குறைந்தபட்சக் கட்டணமாக ரூ. 10ம், ஒவ்வொரு கிலாமீட்டருக்கும் ரூ. 5 எனவும் நிர்ணயிக்குமாறு அவர்கள்கோரியுள்ளனர்.

குழு பரிந்துரைத்துள்ள புதிய ஆட்டோக் கட்டணத்தை அரசு ஏற்கும் என்றே தெரிகிறது. ஆனால், எப்போது முதல்இந்தக் கட்டண உயர்வு நடைமுறைக்கு வரும் என்று தெரியவில்லை.

கட்டணத்தை உயர்த்தும்போதே ஆட்டோ டிரைவர்களுக்கு சில நிபந்தனைகளையும் அரசு விதிப்பதுஅவசியமாகும். குறைந்தபட்சக் கட்டணமாகக் கூடுதல் பணம் பறித்தால் ஆட்டோ பெர்மிட்டை ரத்து செய்யவும்,சூடு வைக்கும் ஆட்டோ டிரைவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கவும் அரசு முன் வர வேண்டும்.

இல்லாவிட்டால் இந்தக் கொள்ளைக் கும்பலிடம் சிக்கி மக்கள் சின்னாபின்னாவாவதைத் தவிர்க்க முடியாது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+