சந்தேகபட்டார் மாப்பிள்ளை: திருமணத்தை நிறுத்தினார் மணப்பெண்

Subscribe to Oneindia Tamil

கோயம்புத்தூர்:

தன் மீது சந்தேகம் கொண்ட மாப்பிள்ளையை வேண்டாம் என்று சொல்லி திருமணத்தை நிறுத்தினார் மணப்பெண்.

கோவை செல்வபுரத்தைச் சேர்ந்த காய்கறி வியாபாரி கிருஷ்ணனின் ஒரே மகள் வித்யா (வயது 24). இவருக்கும்தச்சு வேலை செய்யும் ரமேஷ் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

நேற்று காலை கோவை நகரில் உள்ள மண்டபத்தில் வித்யாவிற்கும் ரமேசுக்கும் திருமணம் நடப்பதாக இருந்தது.இந் நிலையில் நள்ளிரவு 2 மணிக்கு நடந்த நலுங்கு நிகழ்ச்சி நடந்தது. அப்போது திருமணக் களைப்பில் இருந்தவித்யா, திடீரென மயங்கி விழுந்தார்.

இதனால் மண்டபத்தில் டென்சன் சூழ்ந்து கொண்டது. பதட்டமடைந்த அவரது பெற்றோர் மருத்துவரை அழைத்துவர ஓடினர். அதற்குள் மயக்கம் தெளிந்து எழுந்துவிட்டார் வித்யா.

ஆனால், மாப்பிள்ளையின் வீட்டாருக்கு வித்யாவின் மயக்கத்தில் சந்தேகம் வந்துவிட்டது. ஏதோ நோய்இருப்பதால் தான் வித்யா மயங்கி விழுந்ததாகக் கருதிய மணமகனின் பெற்றோர், அது குறித்து வித்யாவிடம்கேள்விகள் கேட்டு நச்சரித்தனர்.

தூக்கம் இல்லாத காரணத்தினாலும் பதற்றம் காரணமாகவும் தான் மயக்கம் வந்ததாக திரும்பத் திரும்ப வித்யாசொல்லியும் அதை அவர்கள் காதில் வாங்கவில்லை. இதனால் இரு தரப்பினருக்கும் வாக்குவாதமும் மோதலும்ஏற்பட்டது.

இப் பிரச்சனை கைகலப்பில் முடிந்தது. இதையடுத்து போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. பெண்போலீஸார் வந்து சமாதானப்படுத்தியும் கூட மாப்பிள்ளையும் அவரது பெற்றோரும் சமாதானம் அடையவில்லை.

இதையெல்லாம் பொறுமையாகப் பார்த்துக் கொண்டிருந்த வித்யா கோபத்தின் உச்சிக்கே போனார். இவ்வளவுசொல்லியும் என் மீது சந்தேகப்படும் இந்த மாப்பிள்ளையுடன் எனக்குத் திருமணமே வேண்டாம் என்று கூறிவிட்டுமண்படத்தை விட்டு தனது பெற்றோர் மற்றும் உறவினருடன் வெளியேறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+