1 வயது குழந்தையை அனாதையாக்கி விட்டுச் சென்ற தாய்
Subscribe to Oneindia Tamil
சேலம்:
ஒரு வயதே ஆன பெண் குழந்தையை பேருந்தில் விட்டுவிட்டுச் சென்றார் தாய்.
பின்னர் தனது பக்கத்தில் அமர்ந்திருந்த பெண்ணிடம், குழந்தையை வைத்துக் கொள்ளுமாறும், கழிப்பிடம் போய்விட்டுத் திரும்புவதாகவும் கூறி குழந்தையைக் கொடுத்து விட்டுச் சென்றார். ஆனால் திரும்பி வரவே இல்லை.
வெகு நேரமாகியும் தாய் திரும்ப வராததால் அக் குழந்தையை மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார் அந்தப்பெண் பயணி.
அநாதரவாக உள்ள அக் குழந்தை தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்ப்படும் என்று தெரிகிறது. அதே நேரத்தில்அந்தத் தாயைக் கண்டுபிடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications