மாணவர்களை ஒடுக்க வருகிறது புதிய சட்டம்: போராட்டம் நடத்தினால் டிஸ்மிஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கல்லூரி மாணவர்களின் போராட்டங்கள் நடத்துவதை முறியடிக்க புதிய சட்டம் கொண்டு வர அரசுதிட்டமிட்டுள்ளது.

இந்த புதிய விதியின்படி கல்லூரியில் சேரும்போதே, போராட்டம் எதிலும் ஈடுபட மாட்டோம், அவ்வாறுபோராட்டம் செய்தால் எங்களை கல்லூரியை விட்டே நீக்கலாம் என்று மாணவர்கள் எழுதித் தர வேண்டுமாம்.

அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு முதலில் அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர் விவகாரம் வெடித்தது. இதில்மாணவர்களை போலீசார் தாக்கியது தொடர்பாக விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது.

இதையடுத்து கல்லூரிக் கட்டண உயர்வு தொடர்பான போராட்டத்தில் மேலூர் கல்லூரிக்குள் புகுந்து மாணவ,மாணவிகளை போலீசார் தாக்க இதனால் மாநிலம் முழுவதும் போராட்டம் வெடித்தது.

இதைத் தொடர்ந்து கல்லூரிகள் நடத்தும் பொறுப்பைக் கைவிடும் நோக்கத்தில் அனைத்து அரசுக்கல்லூரிகளையும் அந்தந்தப் பகுதி பல்கலைக்கங்களுடன் இணைப்பதாக அரசு அறிவித்தது. இதையடுத்து பெரும்போராட்டம் நடந்தது.

இவையெலலாம் சற்றே அடங்கிய நிலையில் தான் வாஸ்து சாஸ்திரப்படி ராணி மேரிக் கல்லூரி இருக்கும் இடத்தில்மலேசிய அரசின் உதவியுடன் தலைமைச் செயலகம் கட்டும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இப்போது இந்தவிவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது.

இதனையடுத்து மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் வந்தது. கிட்டத்தட்ட 40 நாட்கள் இந்தப்போராட்டம் நடந்தது.

இந்தப் போராட்டங்களால் தடுமாறிய அரசு இப்போது மாணவர்களை அடக்க புதிய சட்டத்தையே கொண்டு வரமுடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. அரசு ஊழியர்களை ஒடுக்க அத்தியாவசியப் பணிகள் சட்டம் (எஸ்மா)இருப்பது மாதிரி மாணவர்கள் போராடுவதையும் தடுக்கும் வகையில் இந்த சட்டம் உருவாக்கப்பட உள்ளது.

இதற்கான அரசாணை அடுத்த வாரத்தில் வெளியாகலாம். இதன் மூலம் மாணவர்களின் ஜனநாயக உரிமைகளைப்பறிக்க அரசு முயல்வதாக குரல்கள் எழ ஆரம்பித்துள்ளன. ஆனால், மாணவர்களை ஒழுங்குப்படுத்த அரசுக்குவேறு வழியில்லை என்கிறது தலைமைச் செயலக வட்டாரம்.

கல்லூரியில் சேரும்போதே போராட்டம் நடத்த மாட்டோம் என்று மாணவ, மாணவியர் எழுதித் தர வேண்டும். மீறிஸ்டிரைக் செய்தால் கேளவியே கேட்காமல் எங்களை கல்லூரியை விட்டு நீக்கலாம் என்று எழுப்பூர்வமாக உறுதிமொழி தர வேண்டும். அதில் பெற்றோர் அல்லது கார்டியன் கையெழுத்திட வேண்டுமாம்.

இந்த அரசாணையை வைத்து மீண்டும் மாணவர்கள் போராட்டம் வெடிக்கலாம் என்று தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+