ஜெயலலிதாவுக்கு நாக்கில் சனி: சோ.பா. தாக்கு
சென்னை:
காங்கிரஸ் தலைவர் சோனியாவைத் தாக்கிப் பேசும் முதல்வர் ஜெயலலிதாவின் நாக்கில் சனிதாண்டவமாடுவதாக அக் கட்சியின் மாநிலத் தலைவர் சோ. பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
நேற்று டெல்லியில் நிருபர்களிடம் பேசிய ஜெயலலிதா, எங்கள் தலைவர் சோனியாவை மீண்டும்வாய்க்கு வந்தபடி விமர்சித்துள்ளார்.
ஜெயலலிதாவைப் போல ஒரு பொறுப்பில்லாத முதலமைச்சரைப் பார்க்க முடியாது. சோனியாவைஇந்தியாவில் உள்ள 100 கோடி மக்கள் ஏற்றுக்கொண்டு உள்ளனர்.
முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நாக்கில் சனி மட்டும் அல்ல, கெட்ட நேரமும் தொடங்கி விட்டது.வாஜ்பாய் அரசை கவிழ்க்க வேண்டும் என்பதற்காக அப்போது இதே ஜெயலலிதா சோனியாகாந்தியிடம் கெஞ்சினார். ஆட்சியை கவிழ்க்க ஆதரவு கேட்டார். ஆனால் இப்போது பிரதமர்ஆகக்கூடாது என்கிறார்.
சனி வந்தால் என்ன பேசுவது என்று தெரியாது. இதனால் தான் ஜெயலலிதா இப்படி எல்லாம்பேசுகிறார்.
பொருளாதார குற்றவாளி ஜெ: இளங்கோவன்
இதற்கிடையே முதல்வர் ஜெயலலிதாவை காங்கிரஸ் செயல் தலைவர் இளங்கோவனும் மிகக்கடுமையாகக் கண்டித்துள்ளார்.
அவர் கூறியதாவது:
சோனியா காந்தி பற்றி பேசுவகற்கு ஜெயலலிதாவுக்கு தகுதியோ, அருகதையோ கிடையாது. இரண்டுமுறை பாராளுமன்றத்துக்கு சோனியா காந்தி தேர்ந்து எடுக்கப்பட்டார். தற்போது எதிர்க்கட்சிதலைவராகி இருக்கிறார். இந்திய மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைவி.
எனவே ஜெயலலிதா சோனியாகாந்தி பற்றி விமர்சனம் செய்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.அப்படியும் அவர் பேசினால் அவருடைய கடந்தகால சம்பவங்களைப் பற்றி பேச வேண்டியதுஇருக்கும். அது அநாகரீகமாக கூட இருக்கலாம்.
காங்கிரஸ் தயவு இல்லாமல் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்திருக்கவே முடியாது. பா.ஜ.கவினரைதிருப்திபடுத்தி, டான்சி வழக்கில் இருந்து தப்ப இதுபோல் பேசி வருகிறார்.
ஜெயலலிதா மீது பொருளாதார குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந் நிலையில் ஒருகுற்றவாளியை நிதி அமைச்சர் (ஜஸ்வந்த்சிங்) நேரில் சென்று சந்தித்தது தவறு. அதை நான்வன்மையாக கண்டிக்கிறேன் என்றார் இளங்கோவன்.












Click it and Unblock the Notifications