போதை தடுப்பு அலுவலகத்தில் அடித்துக் கொல்லப்பட்டாரா இலங்கை வாலிபர்?

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் மர்மமான முறையில் இறந்த இலங்கையைச் சேர்ந்தசூரி என்ற சூரியசேகரனின் உடலைப் பிரேதப் பரிசோதனை செய்ய சென்னை உயர்நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.

சென்னை நங்கநல்லூரில் தங்கியிருந்த சூரி, ரூ. 4 கோடி மதிப்பிலான போதைப் பொருளை பதுக்கிவைத்திருந்ததாகக் கூறி மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் கடந்த 8ம் தேதி கைது செய்தனர். அவரதுநண்பரும் கைது செய்யப்பட்டார்.

இருவரும் சென்னை போதைத் தடுப்பு அலுவலகத்தில் விசாரணைக்காக இரவில் அடைத்து வைக்கப்பட்டனர். இந்நிலையில் மறுநாள் காலை அவர் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக அதிகாரிகள் கூறினர்.

ஆனால், அதிகாரிகளின் காவலில் இருந்தபோது, விசாரணை என்ற பெயரில் சூரி கடுமையாக தத்கப்பட்டதாகவும்இதில் தான் சூரி இறந்ததாகவும் அவரது சகோதரி தவமலர் சென்னையில் உள்ள மாநில மனித உரிமைகள்ஆணையத்தில் புகார் கொடுத்தார்.

மேலும் சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ராமமூர்த்தி, சூரியின் உடலை சென்னை அரசு பொது மருத்துவமனையில் பிரேதப்பரிசோதனை செய்ய வேண்டும். அப்போது, தவமலரின் சார்பில் ஒரு டாக்டரும் உடன் இருக்கலாம். பிரேதப்பரிசோதனையை வீடியோவில் படமெடுக்கப்பட வேண்டும்.

பரிசோதனைக்குப் பின்னர் உடல், தவமலரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+